34.சமூக நீதிக்கான அறப்போர்

👨‍🦽👩‍🦼🧑‍🦼🏌‍♀️🏃🏂👨‍🦯🚶‍♀️🚶‍♂️🚶🧍‍♂️🧍‍♀️🧍
# சமூக நீதி.
#புத்தகம்__ #சமூகநீதிக்கான_அறப்போர் .( நலிந்தோர் நலனுக்காக ஒரு வாழ்வின் அர்ப்பணம்)
ஆசிரியர் ..#முனைவர்.வே.வசந்திதேவி .
தமிழில் ..ஆனந்தன்.
பதிப்பகம் _சவுத் விஷன் புக்ஸ் பக்கங்கள்_560
❤ இந்திய அரசின் முன்னாள் செயலாளர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி எஸ் கிருஷ்ணன் அவர்களுடன் உரையாடல்.
#41 கேள்விகளுக்கான பதில்கள் என்ற அடிப்படையில் இந்த புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.
❤ மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் பள்ளிக்
 கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவருமான வசந்தி தேவி அம்மா அவர்கள் பி எஸ் கிருஷ்ணனின் "சாதி ஒழிப்புக்கான சென்னை பிரகடனம் "என்ற நூலுக்காக அறிமுக உரையை எழுதுவதற்காக கிருஷ்ணன் அவர்களிடம் கேட்ட கேள்விகளுக்கான பதில்களே "A Crusade for Social Justice " என்ற ஆங்கிலப் புத்தகம். இதன் மொழிபெயர்ப்பு தான் இப்புத்தகம்
.❤யாருக்காக இந்தப் புத்தகம்?
💜 மனித உரிமைகள் மீதும் இந்தியர்களின் சமூக ரீதியான முன்னேற்றம் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கும்.
// இந்திய ஆட்சிப் பணி நீதித்துறை உள்ளிட்ட அரசு பணிகளில் சிறுவருக்கான பயிற்சிகள் அளிக்கப்படும் போது அதற்கான வழிகாட்டி புத்தகமாக இது கட்டாயம் பரிந்துரைக்கப்பட வேண்டும்// இது வசந்திதேவி அம்மாவின் கருத்து. ஆம். மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள், அரசு அமைப்புக்குள்ளே பணியாற்றிக் கொண்டே ,சமூக நீதியை நிலைநாட்ட  அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதை இந்த புத்தகம் கண்டிப்பாக வழிகாட்டும். 
❤ யார் இவர்?
நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் பிறந்தவர் இந்திய ஆட்சிப் பணியில் அதிகாரியாக பணியாற்றியவர் தமிழக ஆளுநராக இருந்த பி.சி அலெக்சாண்டர்,  குடியரசுத் தலைவராக  இருந்த  கியானிஜெயில்சிங் ஆகியோருடன் இணைந்து  பணியாற்றியவர் . நலிந்த மக்களுக்காக அயராது உழைத்த போராளி.
#காரல் _மார்க்ஸ், அம்பேத்கர், காந்தி, பெரியார் மற்றும் நாராயண குரு ஆகியோரின் தத்துவங்களை ஒன்றிணைத்து உருவாக்கிய தத்துவம் ஒன்று தேவைப்படுகிறது என்று கூறுபவர்.
❤ நிலமற்ற , வீடற்ற , ஏழை விவசாயிகளுக்கும், நலிந்தோருக்கும், அரசு நிலங்களை வழங்கும் பணியை தொடர்ந்து செய்தவர் .அதற்காக 1959இல் அனந்தபூர் உதவி நிலவரி திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
💜 சமூகநீதி என்றாலே நினைவுக்கு வருவது  பெரியார் தான்.அம்பேத்காரைப் படிப்பவர்கள் அவரின் நூற்றாண்டு விழாவிற்குப் பிறகு தான் அதிகரித்துள்ளனர்.நானும் பாடப்புத்தகங்களைத் தாண்டி இன்னும் வாசிக்கவில்லை.(கிணற்றுத் தவளை என்று....) நவீன இந்தியாவின் உருவாக்கத்தில் டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பு அளவுக்கு அவரது தலைமுறையைச் சேர்ந்த வேறு எவரும் செய்யவில்லை என்கிறார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவரும் தென்னாசிய வரலாறு மற்றும் அரசியல் அறிஞருமான கிறிஸ்டோப் ஜப்பார்லெட்..
நமக்குத்தான்...🙄
💜என்ன சிறப்பு???
💜 அம்பேத்கருக்கு பிறகு இந்திய சமூகத்தில் சமூகநீதியை சுற்றி நடைபெற்ற , நடைபெற்று வருகிற மிகப்பெரும்பாலான நிகழ்வுகளின் பின்னணியில் பி எஸ் கிருஷ்ணன் இருக்கிறார் "அரசின் ஆளுகையில் மக்கள் நலன் சார்ந்த தலையீடுகள் செய்வது " என்ற அம்பேத்கரின் மரபை அழிந்துவிடாமல் வலுப்படுத்தி வந்திருக்கிறார்.
💜 பல சட்டங்களை திட்டங்களை உருவாக்கியவர் தான் என்றாலும் பி எஸ் கிருஷ்ணன் இந்தியாவின் சட்டங்களை #அனாதை_குழந்தைகள் என்று வர்ணிக்கிறார். அவரது மனதில் மதிப்புக்கு உரியதாக உயர்ந்து நிற்பது மக்களின் அறப் போராட்டமே !மக்களை விழிப்படைய வைப்பது அவரது நோக்கம்.👍. 

💜சில முக்கியமான கேள்விகள் ..இதற்கான விடைகளை நீங்கள் புத்தகத்தில் தான் படித்துக் கொள்ள வேண்டும் 😍
1.வரலாற்று சிறப்புமிக்க மண்டல் கமிஷன் சட்டத்தால் பிற்படுத்தப்பட்டோர் எந்த அளவுக்கு பயன் அடைந்துள்ளார்கள்?
2. சமூக அமைப்பை மாற்றுவதற்கு இந்திய அதிகார வர்க்கம் பெரும் தடையாக இருக்கிறது என்கிறார்களே உங்கள் கருத்து என்ன? 
3. தீண்டாமை தொடர்கிறது என்ற குற்றத்தில் அரசின் பங்களிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது? 4.கல்வியில் உள்ள இடைவெளியை எப்படி இணைப்பது?
5.மனிதனையும், இயற்கையையும் மதிக்காத நவீன தாராளமய ஆளுகையில் பழங்குடிகளுக்கு நீதியும் சமத்துவமும் கிடைக்கும் என நினைக்கிறீர்களா?
6.நமது சாதி அமைப்பின் கொடூரமான பரிமாணங்களை எதிர்கொள்வதில் இந்தியாவின் தோல்வியை எப்படி நீங்கள் விளக்குவீர்கள்?
7.ஒடுக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதில் ஊடகத்தின் பங்கு?????
❤இப்புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் சமூக சமத்துவத்திற்கு வழிகாட்டும் செயல்திட்டத்தை வகுத்திருக்கிறார்.சமத்துவத்தை கொண்டுவருவதற்கான தற்போதைய சட்டங்கள் மேலும் எவ்வாறு இருக்க வேண்டும் எவ்வாறு   செயல்படுத்தப் பட வேண்டும் என்பதைத் தெளிவாக வரையறுத்துக் கூறியுள்ளார்.
💜கடைசியாக இணைக்கப்பட்டுள்ள பெயர் அகராதியும் சிறப்பு 💐
இன்னும் ஏராளமான தகவல்கள், நிகழ்வுகளை சொல்லாமல் விட்டிருக்கிறேன் என்கிறார் பி.எஸ். கிருஷ்ணன் அவர்கள்🙏🏻
இவையே நமக்கு மலைப்பைத் தருகிறது.ஆனால் அவரோ அடக்கமாக என் கடமையைச் சரியாக செய்தேன்.நீங்கள் நன்றி உரைக்க அவசியமில்லை என்கிறார் எளிய மனிதர்களிடம்... ❤
#செயற்கரிய_செய்வர்_பெரியோர்.🙏🙏🙏

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு