36.மாபெரும் தமிழ்க் கனவு

❤🙏❤🧍❤🙏🙏❤❤🙏🙏❤❤
புத்தகம் .#மாபெரும்_ _தமிழ் _கனவு .
தொகுப்பு ஆசிரியர்_சமஸ் 
பதிப்பகம் _#இந்து_ _தமிழ்_திசை .
பக்கங்கள்.. 800
#பேரறிஞர் அண்ணா_ பேராளுமை .
❤என் தாத்தாவின் மூலம் அறிமுகம். வழக்கமாக எல்லா தாத்தாக்களையும் போல 1925 நீதிக்கட்சியில் ஆரம்பித்து தான் தற்காலத்து நிகழ்ச்சியில் வந்து திமுகவின் கதையை முடிப்பார்.😍 இரண்டாவதாக  ஆசிரியர் பயிற்சி படிக்கும்போது அண்ணாவின் உரையைப் (ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் வந்தது என்று நினைக்கிறேன்)பேசப் போவதாகச் சொன்னேன். உடனே என்னுடைய பேராசிரியர் பஷீர் சார் எத்தனை நிமிடம் ?10 நிமிடம் என்றால் எவ்வளவு படிக்க வேண்டும் தெரியுமா? நொடி முள் 10 முறை முழு சுற்று சுற்ற வேண்டும்🙄 என்று பயமுறுத்தி பின்  நல்ல உரையை தேர்வு செய்திருக்கிறாய் 👍 முயற்சிக்கு வாழ்த்துக்கள் என்று சொன்னார். ❤
❤அண்ணாவைப் பற்றியும் அவரின் கனவுக்காக ஆற்றிய பணிகள் பற்றியும் மணிக்கணக்காக, நாட்கணக்காக, மட்டுமல்ல வருடக்கணக்காக பேசுவதற்கான தகவல் பெட்டகமே இந்த புத்தகம்💕🌅.
இந்தப் புத்தகத்தை வாசிக்கும் அனைவருக்குமே மலைப்பை  தரும் அண்ணாவின் ஆளுமையை பார்த்து...
❤அண்ணாவின் பேச்சு
🌅 நாடகங்கள்,
❤ பேட்டிகள்,
🌅 மக்கள் மன்ற உரைகள் ,
🌅நாடாளுமன்ற உரைகள்,
❤ சட்டமன்ற உரைகள், 🌅அண்ணாவின் கடிதங்கள்,
🌅 பத்திரிகைகள்,
 ❤அண்ணாவைப் பற்றிய தலைவர்களின் கட்டுரைகள் ,என தொடர்ந்து கொண்டே இருக்கிறது.....😍❤📚நெசவாளர் குடும்பத்தில் பிறந்து 1 முதல் இன்டர் வரை பள்ளிப்படிப்பை முடித்து, 1934இல் பி .ஏ ஹானர்ஸ்  படிப்பு படித்தவர், சட்டக் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய இவர், அமெரிக்காவிலுள்ள யேல்  பல்கலைக்கழக மாணவர்களிடம்
கலந்துரையாடுகிறார்.💐
#கல்வி ஒரு மாநில விஷயம் .டில்லிக்கு அதில் உரிமை ஏதும் கிடையாது என்று அழுத்தம் திருத்தமாக அமெரிக்காவில் கூறுகிறார்.
"அண்ணாதுரை எங்கு ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டார்?" என்று ஒரு ஆங்கில நிருபர் கேட்கும் அளவு இருக்கிறது அவரது பேச்சு.
🎤நாடாளுமன்றத்தில் ஆற்றிய முதல்  உரையின் மூலம் உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்தவர்.
🌅 இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு தேவையான நிலச்சீர்திருத்தம், இருமொழிக் கொள்கை, அனைத்து மக்களும் அரசு இடம்பெறுமாறு ஏற்படுத்திய சமூக நலத்திட்டங்கள், பொருளாதார தொலைநோக்குத் திட்டங்கள் போன்றவற்றை இன்றுவரை நடைமுறைப்படுத்தும் வகையில் அடித்தளம் இட்டுச் சென்றுள்ளார்.
❤💙"மக்களிடம் செல்லுங்கள். அவர்கள் மத்தியில் வாழுங்கள். அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். அவர்களிடம் என்ன இருக்கிறதோ அதில் இருந்தே உருவாக்குங்கள்!” சீன ஞானி #லாவோ ட்சு சொன்ன குறிப்பு  அண்ணா தன் கைப்பட எழுதிக் கொடுத்துள்ளார். (VIT GV ஐயா மேசையில் இருக்கிறது) .இது 
அரசியல் தம்பிகளுக்கு.. சொல்லாமல் சென்ற தகவல்கள் பல
💙சாதனைகளில் சில...
🌷 தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தது
🌾 உணவு தானிய வினியோக கட்டமைப்பு
💙 சுயமரியாதை திருமணத்திற்கான சட்ட அங்கீகாரம் 
💙 யேல் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியான டிமோதி டிவைட் கல்லூரி அவருக்கு Chubb உறுப்பினர் என்ற பட்டத்தை அளித்தது.
🖤 அவரது இறுதி ஊர்வலமே ஒரு கண்ணீர் சாதனையை படைத்தது.
#பெருந்தன்மை_மேன்மை குணம்.
📚 சட்டரீதியான கடுமையான அடக்குமுறைகளை சந்தித்தாலும், வன்முறையின் பக்கம் தனது தம்பிகள் சென்றுவிடாமல் கண்காணிக்கிறார். கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிப்பு அடைய கூடாது என்பதற்காக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அவருடைய நிலைப்பாடு, திராவிட நாடு கொள்கையில் அவருடைய நிலைப்பாடு, எதிரணியில் இருப்பவர்களுக்கு அவர் கொடுத்த மரியாதை ஆகியவை அவருடைய பெருந்தன்மைக்கும் மேன்மையான குணத்திற்கும் எடுத்துக்காட்டு🧡.
🌷 பசுமரத்தாணி போன்ற சொல்லாடல்கள்.
💙 எங்கிருந்தாலும் வாழ்க!
💙கடமை, கண்ணியம் ,கட்டுப்பாடு! 💙சட்டம் ஒரு இருட்டறை .அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு.....
💙🧡💙🧡
எழுத்துப் பணிகளை  சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றாலும்  இன்னும் சில பக்கங்கள் எழுத வேண்டும். #வேலைக்காரி, #ஓர்_இரவு படத்தை மட்டும் பார்த்து விடுங்கள்👍
எதில் முடிப்பது என்று தான் தெரியவில்லை. இது அண்ணாவின் வரலாறு மட்டுமல்ல நம் தமிழ்நாட்டின் வரலாறும் கூட.
இது #வாசிக்க வேண்டிய நூல் மட்டும்  அல்ல.சுவாசிக்க🧡🧡👍

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு