37.அருகர்களின் பாதை

🙏🤍🙏🤍🙏🤍🙏🤍🙏🤍💙💙💜💙
புத்தகம் ..அருகர்களின் பாதை .
ஆசிரியர்..ஜெயமோகன் பதிப்பகம்.. கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்.. 270 .
#பயணம்
 🛤️பயணங்கள் நம் பார்வையை விசாலமாக்குபவை. மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்க கூடியவை😍 ஆன்மீகம், சுற்றுலா, வேலை ,உறவு என பல காரணங்களுடன் பயணிக்கிறோம் .பலவித மனிதர்களை நமக்கு பயணம் அறிமுகப்படுத்துகின்றது .கேட்டால் மட்டுமே உதவி செய்யும் சிலர், கேளாமலே தேடிவந்து உதவும் சிலர், சுயநலத்தோடு சிலர் எனப் பலரை அறிமுகப் படுத்தி வாழ்க்கைப் பாடங்களை நமக்கே தெரியாமல் நடத்தி விடும்.❤
#புத்தகத்தைப்_பற்றி ஆசிரியர் தன் நண்பர்களுடன் ஒரு மாதம் ஈரோடு முதல் ராஜஸ்தான் வரை உள்ள சமண தலங்களுக்குப் பயணித்திருக்கிறார். அந்த பயணக்குறிப்புகள்  தான் இப்புத்தகம். இணையத்தில் முதலில் வெளியிடப்பட்டுள்ளது.
🚘பத்தாம் வகுப்பில் படித்ததோடு  நின்று விட்டது என்  வரலாற்று அறிவு.  2018 ல் கயா சென்றபோது (மறதி அதிகரித்து விட்டது என்ற ஞானோதயம்.. 🤪)புத்தரைப் பற்றி தேடிப் படிக்க வேண்டும் என நினைத்தேன். இன்னும் ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை. மகாவீரர் பற்றிய இந்தப் புத்தகத்தால் இணையத்தில் தேடிப்பிடித்துப் படித்தேன்.
#சில தகவல்கள் 
பார்சுவ நாதர்  23 வது தீர்த்தங்கரர்.(வர்த்தமானர் 24 வது).  😷திகம்பரர்கள் வானத்தை ஆடையாக உடுத்துபவர்கள். வெள்ளை ஆடை மட்டுமே உடுத்தும் துறவிகளுக்கு ஸ்வேதம்பரர்கள்  என்று பெயர்.  சமணர்களின் ஒரு பிரிவினர்தான் அருகர்கள்(பிங்கல நிகண்டு). 
💙இந்நூலில் ஒவ்வொரு ஊரிலுள்ள கோயில்களில் உள்ள .
சிற்ப கலையை, நுட்பமான வேலைப்பாடுகளை, பளிங்கு கல்லில் உள்ள பெருமைகளைப் பற்றியும் விவரித்துக் கூறியுள்ளார்.

🛤️சிரவணபெலகொலா,(இங்குள்ள சிலையை அம் மக்கள் பாகுபலி என்கிறார்களாம்).  தர்மஸ்தலா, பெல்காம்,சூரத், ஜெய்ப்பூர் இவை மட்டுமே நான் அறிந்த ஊர்களின் பெயர்கள்.பல ஊர்கள்  நமக்கு புதியவை.  ஆனால் வரலாற்று சிறப்புமிக்கவை. 🛕🛕🛕உலகிலேயே மிகப் பெரிய கோயில் வளாகம் உள்ள இடம் சத்ருஞ்சயா மலை .3507 கோயில்கள் இருக்கிறதாம்😮. சமணர்களின் வரலாறு, சோலங்கி வம்சத்து மன்னர்கள்,ராஜபுத்திரர்கள், மராட்டியர்கள் என பல வரலாற்று தகவல்களும் நிரம்பியிருக்கின்றன.

🤔🤔
 //பத்தாம் நூற்றாண்டில் வடக்கே மாபெரும் கலை சாதனைகள் நிகழ்த்தப்பட்ட  காலகட்டத்தில் தஞ்சை பெரிய கோயில் சிலைகள் வழியாக நாம் சிற்பக்கலையின் ஆரம்பகட்ட சாதனைகள் சிலவற்றை செய்தோம்.நமது சிறப்பான கலை. ஆனால் இவை மகத்தான கலை என்று பாராட்டும் ஆசிரியர்,ஓர்  இந்தியனாக இந்த ஒவ்வொரு கலையும் என்னுடையது என்று முடிக்கிறார்.

🤔 ஆரியர் _திராவிடர் குறித்த அவரது பார்வையையும் பதிவு செய்துள்ளார்.
🙃லோதல், டோலாவீரா போன்ற புதை நகரங்களைப் பற்றி மிகவும் பெருமையாக கூறியிருக்கிறார். அனேகமாக இந்த புத்தகம் வெளியான நேரத்தில்  கீழடி வெளிச்சம் பெற்று இருக்காது என்று நினைக்கிறேன். 😍

🤔🤔🤔
அடுத்து,,நம்மூர் ராஜராஜசோழன்_ கருவூர்தேவர் போல ஹேமச்சந்திரா_ குமாரபாலர் உறவு குஜராத்தில் ..
ஆசிரியரின் வினா...//ஏன் குமார பாலரை நாம் அறிந்ததே இல்லை? இராஜராஜ சோழனை ஏன் குஜராத்திகள் அறியவே இல்லை?//
🤔பாடத்திட்டங்களை தீர்மானிக்கும் உரிமை மத்திய அரசில் இருந்தால் மட்டும் நாம் தெரிந்து கொண்டு இருப்போமா என்ன?இல்லை அவர்கள் சோழனை அறிந்து கொண்டிருப்பார்களா??
(Mind  voice..இதெல்லாம் அரசியல்..ல சகஜமப்பா)
💜💜💜🛕🛕💜💜
இறுதியாக..
#அசதோமா_சத்_கமய தீமையிலிருந்து நன்மைக்கு..
இருளிலிருந்து ஒளிக்கு... மரணத்திலிருந்து பெருவாழ்வுக்கு இட்டுச் செல்க❤😍👍🏻

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு