38.அருணா இன் வியன்னா

💃💃💃💃💃💃💃❤💜💙❤💃💃💃
#பயணம். 
புத்தகம்..#அருணா 'இன்' வியன்னா.
ஆசிரியர்..#அருணாராஜ்
பக்கங்கள்.. 116
 ❤கிண்டிலில் படித்தது.
அருணா, பவித்ரா, பிரசன்னா, ஸ்வர்ணா என கிருஷ்ணகிரியைச் சேர்ந்த நான்கு பள்ளித் தோழிகள் திருமணத்திற்குப் பிறகு  ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா  சென்று வந்த கதை❤ 
✈பயணக்கட்டுரைகள் ஆக இல்லாமல் ஒரு தோழியுடன் நேரில் அனுபவங்களை கேட்டு ரசித்து, சிரித்து, மகிழ்ந்த அனுபவத்தை தருகிறது இப்புத்தகம்.
#இடங்கள்..
ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட், ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னா, மற்றும் செக்  ரிபப்ளிக் இன் தலைநகர் பிராக்.🌍

😍ஆரம்பமே அதகளம் தான் .வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார் வீட்டில் அனுமதி வாங்குவதில் இருந்து விசா வாங்குவது வரை..
ஏர்போர்ட்டில் நான்காவது டெர்மினல் வழியாக வரச்சொன்ன தோழி ,இரண்டாவது டெர்மினலில் உள்ளே நுழைந்து இரண்டு பேரும் ஒன்று சேர்வது, விமானத்தில் கொடுக்கப்படும் உணவு வரை எழுதி இரண்டாவது ரவுண்டு சிரிக்க வைக்கிறார். (அவங்களுக்கு கஷ்டம் நமக்கு சிரிப்பு🤪)
#புடாபெஸ்ட்.. 
🎈அப்பார்ட்மெண்ட் பங்களா காம்பவுண்ட் உள்ளே நுழைய, கட்டடத்துக்கு உள்ளே நுழைய, பிறகு அப்பார்ட்மெண்டில்  நுழைய... என அனைத்திற்கும் நம்பர் கோட்..  புகார் கார்டு என்று ஒரு ட்ராவல் கார்டு இருந்தாலும் வித்தவுட்டில் பயணம் செஞ்ச முதல் நாள்.🤩
டான்யூப் நதியின் ஓரம்  செல்லும் ட்ராம் பாதை  உலகிலேயே மிக அழகான பாதையை கொண்டதாம்😍 💐குறைவான மக்கள்தொகை, குறைவான நெரிசல் கொண்ட  தலைநகரம். நிறைய காபி கடைகள் உண்டாம் (இதுதான் போய் வரவேண்டும் என்ற ஆசையை தூண்டுகிறது🥰 )ஆனால் சூடா கிடைக்காதாம். வெதுவெதுப்பான சூடு தானாம்.
(டூர் கேன்சல்...🤪).
உலகிலேயே இரண்டாவது பெரிய பாராளுமன்றம் இங்கு உள்ளது .கூரை முழுக்க, வாசக்கால், படிகளின் கைப்பிடிகள்   அனைத்தும் தங்கத்தில் இழைத்திருக்கிறார்களாம். 🏫
#அருணாவின் _சந்தேகம் ..இந்த   ஊரில் பிறந்த உடன் எல்லோருமே தனி மனித ஒழுக்கம் பற்றிய கோச்சிங் கிளாஸ் போய் இருப்பார்களா என்ன?😍அவ்வளவு ஒழுங்கு 💐
#வியன்னா
✈🚞 யூரோ டிரெயினில் மூன்று மணி நேரம் பயணம். புடா பெஸ்டில் இருந்து   வியன்னாவுக்கு..
இங்கும் ஆடியோ கைட் வசதி உள்ளது🎧 🌍ஆஸ்திரியாவின் அரண்மனை நகரம்🏤,
🎈 சவுண்ட் ஆப் மியூசிக் படம் எடுக்கப்பட்ட இடமான #சால்ஸ்பர்க்
(மொசார்ட் பிறந்த ஊர்🎼🎼❤) 
 ஆகியவற்றை சிறப்பாக கூறலாம் .தெருவில் பாடுபவர்களும் இருக்கிறார்களாம்.. தட்ப வெப்பமும் மழை வெயில் என மாறி மாறி இருப்பது ரசனைக்குரிய வகையில் இருக்கிறதாம்.🎧 கைட் ஆங்கிலம்,ஸ்பானிஷ் மொழியில் விளக்கம் அளிக்கிறார். 
😍அருணாவின் கருத்து...//ஸ்பானிஷ்   மட்டுமல்ல.. ஹங்கேரியன், ஜெர்மன் என எல்லாமே எனக்கு காலகேயர் பாஷை தான் வேறு வேறு ஏற்ற இறக்கங்களுடன்//🤩
🚆🚞#பிராக்..
எலுமிச்சை சாதத்தோடு யூரோ டிரெயினில் பயணம் செய்து வந்திருக்கிறார்கள்🤝🏻 முக்கியமான தகவல்..☕☕ நடுவில் சூடா காபி கிடைத்ததாம்❤
..இதில் ஒரு well-trained நாய்  உடன் பயணம் செய்திருக்கிறது ( Trained என்றால் போலீஸ் நாய் இல்லைங்க.. இவங்க போட்ட அளவுகூட சத்தம் போடாம அமைதியா வந்து இருக்கு 🤪அதுதான்) .
😎நம்ம ஊர் சாயலில் உள்ள சுத்தமான நகரம்.. (சாலை விதிமீறல்கள், பிச்சைகாரர்கள், கூட்டங்கள் ,......) 
❤சிறப்பு என்று சொல்வதானால், வாக்கிங் டூர், நதியில் போட்டிங் ,டிராமில் பயணம் , ஆஸ்ட்ரநாமிகல்  கடிகாரம் ( பதிமூன்றாம் நூற்றாண்டில் வைக்கப்பட்ட எலும்புக்கூடு மணி அடிக்கும் கடிகாரம்🙄) ஊரில் சுற்றும் தண்ணி வண்டி, Special அருங்காட்சியகம்.. ஆகியவற்றைச் சொல்லலாம்.
🍟🍔🍚🍿🍪🍩🧁
#சாப்பாடு..
பாஸ்மதி அரிசி ,குக்கர், ரெடிமேட் மிக்ஸ் எனப் பல முன்னேற்பாடுகளுடன் தான்  சென்றிருக்கிறார்கள்.❤
#ஆச்சரியங்கள்.. 
புறாக்கள், நாய்கள், குழந்தைகள் ,திருஷ்டி மிளகாய்,பழைமையைப் போற்றுதல்....
போன்றவை.
✈️✈️✈️
# பிரச்சினை இல்லாத ட்ரிப் எது?
சில்லறை ,சிகரெட் ஸ்மெல், Dry toilets, கரன்சி எக்ஸ்சேஞ்ச் இது போலத்தான்...
#அருணாவின்_கருத்து..
//எந்த பயணத்திற்கு முன்பாகவும் அந்த நாட்டைப் பற்றி கொஞ்சமே கொஞ்சமாவது தெரிந்து வைத்திருத்தல் சுற்றுலாவை கூடுதல் சுவாரஸ்யம் ஆக்குகிறது😍//.
❤வீட்டில் இருப்பவர்களையும், சுற்றி இருப்பவர்களையும் சமாளித்து  பெண்கள் வெளிநாட்டு சுற்றுலா செல்வது என்பது அரசு பள்ளியில் படித்து, 🙄 நீட் எக்ஸாமை  கோச்சிங் சென்டர் போகாமல், முதல் முயற்சியிலேயே கிளியர் பண்ணுவது போன்ற ஒரு ஹெர்குலியன் டாஸ்க்(இதுவும் நம்ம பல் மருத்துவர் அருணா சொன்னது தான் 🤔)
அதை  வெற்றிகரமாக முடித்த நான்கு தோழிகளுக்கும் 4  பூச்செண்டுகள் ..💐💐💐💐 வாழ்த்துக்கள்..🎈🎈❤❤

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு