39.டோட்டா_சான்

🧍🧍‍♂️🧍‍♀️💜💙❤🤍🧍‍♂️🧍‍♀️🧍🏃🏌‍♀️🚶‍♀️🚶‍♂️💃💃
#குழந்தைகள்_கல்வி தொடர்பானவை
புத்தகம்__ #டோட்டா_சான் ...ஜன்னலில் ஒரு சிறுமி.
ஆசிரியர்..  #டெட்சுகோ_குரோயா_நாகி.
தமிழில் ..வள்ளிநாயகம் 
சொ. பிரபாகரன்..
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு
பக்கங்கள் _  160.
  *பள்ளி நூலகத்தில் உள்ள முக்கியமான நூல்*
💙குழந்தைகளுக்கான உளவியலை எவ்வளவுதான் படித்திருந்தாலும் நாம் அடிக்கடி #ஆசிரியராகவே மாறி விடுகிறோம். குழந்தைகளின் பார்வையில் இருந்து பார்க்கத் தவறி விடுகிறோம்.
குறும்பு செய்யும் குழந்தைகள் இல்லாத வகுப்பறையை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அவர்களைக் 
கையாளும்போது உடலால் துன்புறுத்தவில்லை என்றாலும் மனதளவில் ஆவது அவர்களைத் துன்புறுத்தி தான் அடக்கி வைப்போம் .
ஒழுக்க நெறிகள், பாடத்திட்டம், கண்டிப்பான ஆசிரியர் தான் நல்ல ஆசிரியர் என்ற எண்ணப்போக்கு,
என எத்தனையோ காரணங்கள் நமக்கு. ஆனால் குழந்தையின் பார்வையில்??😕

😎தன்னுடைய குறும்புத்தனங்களால் முதல் வகுப்பிலேயே  பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட  சிறுமிதான் இந்த நூலின் ஆசிரியர். இரண்டாம் உலக யுத்த காலத்தில் டோக்கியோவில் இருந்த ஒரு முன்மாதிரியான பள்ளியில் படித்து ,பின்னாளில் ஜப்பானின் தொலைக்காட்சியில் தோன்றும் புகழ்பெற்ற ஒருவராய் மாறி இருக்கிறார் .அவருடைய வெற்றிக்கு காரணமான அற்புதமான #டோமாயி பள்ளியைப் பற்றியும் ,அதன் தலைமை ஆசிரியரான #சோசாகு_கோபயாஷி பற்றிய நினைவுகளின் தொகுப்பே இந்த நூல்.

😍 அவருடைய வெற்றிக்கு அடிப்படைக் காரணம் அவருடைய தாயாரும் தான். 24 வயது வரை முதல் வகுப்பில் இவ்வாறு ஒரு பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்ற விஷயத்தையே அவரிடம் இருந்து மறைத்திருக்கிறார். ஒரு குழந்தையின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது தாழ்வு மனப்பான்மையும், இத்தகைய மன அழுத்தங்களும் தான் . அதை அவருடைய தாயார் சரியாக கையாண்டிருக்கிறார்.🤝🏻
💙முதல் பள்ளியில் டோட்டா_சான் செய்த குறும்புகளை ஆசிரியர் விவரிப்பதை படித்தாலே போதும்.
நம் வகுப்பு குழந்தைகள் பரவாயில்லையே என்று தோன்றிவிடும். அவ்வளவு அட்டகாசம் (Awesome 🤩)
 💙டோட்டா-சானின் இரண்டாவது பள்ளிதான் டோமாயி.. நான் இந்தப் பள்ளியை ரொம்ப விரும்புகிறேன் என்று ஒரு குழந்தையால் மகிழ்ச்சியுடன் சொல்லுமளவிற்கு அதனுடைய சிறப்பம்சங்கள் .. 
💙பள்ளியில் சேர்ந்த நாளன்றே பள்ளியின் தலைமையாசிரியர் நான்கு மணி நேரம்🤔 குழந்தையின் பேச்சை பொறுமையுடன்  கவனிக்கிறார்.
💃ரயிலுக்குள் வகுப்பறை
🍽🍝மதிய உணவு நேரம் (கடலில் இருந்து கொஞ்சம் மலையிலிருந்து கொஞ்சம்)
🚶‍♀️🚶‍♀️பள்ளி நடைகள்( மதிய வகுப்புக்கு பதிலாக பள்ளியைச் சுற்றியுள்ள இடங்களுக்கு ஆசிரியருடன் சென்று உற்று நோக்குதல். )
🧜‍♀️நீச்சல் குளம்
🚶‍♀️🚶‍♂️வெந்நீரூற்றுக்கு ஒரு பயணம்
🚞வாசிப்புக்கு ஒரு ரயில் வண்டி 
🦢🦢அன்னப்பறவை ஏரி இன்னும் பல💙💙💙

👫🏻டோட்டோ-சான் வகுப்பில் டாய்_சான் என்ற மாணவன் இருந்தான்.நரி என்பதற்கான ஆங்கில வார்த்தையை அவளுக்கு கற்றுக் கொடுத்தவன்(💭💭💡 நான் தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது எனது ஆசிரியர் நரிக்கு ஆங்கிலத்தில் என்ன என்று கேட்டபோது நினைவுக்கு வரவில்லை😎 எனது வகுப்பில் எல்கேஜி படித்த,🥇 ஆங்கிலப் புலமை பெற்ற😎 எனக்கே தெரியாததால், மற்றவர்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை 🙈என்னை விட இரண்டு வயது சிறியவளான என் அத்தை பெண் Barkavi Paramasivam, Fox என்று கூறி வகுப்பு முழுவதும்  அவள் கையால் குட்டு வாங்கியது இன்றுவரை மறக்க இயலவில்லை🙈 வீட்டிலேயே விட்டுவிட்டு போகாமல் அழைத்துச் சென்றது நம்ம தப்பு😀)நிகழ்வுக்கு வருவோம்...
அதற்காக அவனின் பென்சில்களை தினமும் அழகாக சீவி வைப்பாள். ஆனால், சுமோ குத்துச்சண்டையில் அவனைத் தோற்கடித்து விடுவாள் டோட்டா _சான்.  அதற்காக டாய்_சான் (மூன்றாம் வகுப்பு😍) கோபித்துக்கொண்டு கூறுவது ..நான் வளர்ந்து பெரியவன் ஆனதும் உன்னை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. நீ எவ்வளவுதான் கேட்டாலும்... இது தான் குழந்தைகளின் உலகம்❤

😍டோமாயி பள்ளியின் தலைமையாசிரியர் கூறிய இந்த முக்கியமான வார்த்தைகள் தான் ஆசிரியரின் வாழ்க்கை முழுவதும் செம்மைப் படுத்தியது "டோட்டா_சான் நீ உண்மையிலேயே நல்ல பெண் உனக்குத் தெரியுமா?"

💙டோட்டா_சான்  முழுமையாக இந்த வார்த்தைகளை நம்பினாள். நம்பும்படி அவளுடைய ஆசிரியர் கூறியிருக்கிறார் .❤

💙பெற்றோர்களாக நம் குழந்தைகளிடமும் ,ஆசிரியர்களாக நம் மாணவர்களிடம் இந்த நம்பிக்கையை வளர்த்தெடுப்பதே நம் கடமை.❤
🙌 செய்வோம் நிச்சயம்👍

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு