40.என் சிவப்பு பால்பால்பாயிண்ட் பேனா

❤👨‍🚀👩‍🚀🧑‍💻👩‍💻🧑‍💻👩‍💻🧑‍💻👩‍💻🧑‍💻
#கல்வி _
புத்தகம் ..என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா 
ஆசிரியர்..#ச_மாடசாமி .
பதிப்பகம்...பாரதி புத்தகாலயம்.
பக்கங்கள் ..80
👨‍🏫தமிழகத்தின் குறிப்பிடத்தக்க கல்வியாளர்களின் ஒருவரே இந்த புத்தகத்தின் ஆசிரியர்.எனக்குரிய இடம் எங்கே? படித்ததிலிருந்து இப்புத்தகத்தை வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து, வாசிக்கும் ஆசிரியர்கள் தங்களை சுயமதிப்பீடு செய்து கொள்ள வைக்கும் விதமாக எழுதி இருக்கிறார்.  கல்லூரி,பள்ளி என்று களம் வேறாயினும்   மாணவர்களின் நலன் ஒன்றே குறிக்கோள். சிவப்பு பால்பாயிண்ட் பேனா பயன்படுத்தும் போதெல்லாம் கண்டிப்பாக இந்த கட்டுரை நினைவு வரும். தொடக்க நிலையில் என்ன ஒரு வசதி என்றால் குழந்தைகள் விரைவில் மறந்து நம்முடன் சேர்ந்து கொள்வார்கள்.பதின்ம வயது  குழந்தைகளைக் கையாளும் ஆசிரியர் குறிப்பிடுவது போன்று சிவப்பு பால்பாயிண்ட் பேனாவை அதிகாரம் அற்றதாக மாற்றுவது அவசியம்.🤝🏻

*இரண்டாவது கட்டுரை அவமதிப்பு பற்றியது.. நாம் கவுண்டமணி_ செந்தில் நகைச்சுவைக் காட்சிகளைப்  பார்த்து வளர்ந்தவர்கள். நகைச்சுவை என்றாலே யாரோ ஒருவருடைய உருவத்தையும், நடத்தையையும் கேலிப் பொருளாக ஆக்குவது என்று நம் பொதுப்புத்தியில் படிந்து விட்டிருக்கிறது .ஒரு சிறு சொல் கூட குழந்தையின் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தும் என்பதை எப்போது உணர்வோம்?? 
"தீயினால் சுட்ட புண் உள்ளாறும்  ஆறாதே நாவினால் சுட்ட வடு". என்று நாம் சொல்லிக் கொடுப்பது மதிப்பெண்களுக்கு மட்டுமா ?
பின்பற்றவா? யோசிப்போம்.🤝🏻

🧑‍🏫👨‍🏫பள்ளி ஆசிரியர்களுடன் விவாதம்... பயிற்சிகளோடு இப்படிப்பட்ட கலந்துரையாடல்களை நாங்களும் எதிர்பார்க்கிறோம். கல்வியாளர்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும்🙏🏻

👨‍🏫👩‍🏫பட்டப்பெயர் வைப்பது, பொய்களுக்கு ஒரு இடம், கல்வி மானுடவியலாளர்களின் கண்டுபிடிப்பான 'பேய் பிடிச்சிருக்கு' இவை எல்லாமே சிந்திக்கத் தூண்டுபவை.

👨‍🏫👩‍🏫ஆசிரியர்கள் படிக்க வேண்டிய நூலாக இரண்டு நூல்களை பரிந்துரைக்கிறார்
1.டோட்டா_சான்   ஜன்னலில் ஒரு சிறுமி
2. பகல் கனவு .(கிஜுபாய்)
 இரண்டு நூல்களையும் வாசிக்கும் வாய்ப்பு எனக்கு பள்ளி நூலகத்தின் மூலமே கிடைத்தது .கிஜுபாயின்கல்விப் பரிசோதனைகள், குழந்தைகள் நலனில்(அதாவது  ..மகிழ்ச்சியில்.. மதிப்பெண்ணில் அல்ல) அக்கறையுள்ள ஆசிரியர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும். நிர்வாகத்திற்கு உட்பட்டு, சாத்தியம் உள்ளவற்றை, உழைப்பு இருந்தால் சாதிக்கலாம் என்பதே உண்மை.எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தைத் தரும் என்பதும் உண்மையே😍
👨‍🏫ரெபேக்கா நாதன் என்ற புனைபெயரில் #கேத்தி_ஸ்மால் என்ற மானிடவியலாளர் எழுதிய My Freshman Year என்ற புத்தகம்  தமிழ் மொழிபெயர்ப்பில் இருந்தால் படிக்கலாம்.👍🏻

👩‍🏫👨‍🏫பள்ளியும், பண்பாட்டுப் புரட்சியும் கட்டுரையில்..சீனாவில் நடந்த கலாச்சாரப் புரட்சி பற்றி விவரிக்கிறார். அப்போது நிகழ்ந்த முக்கிய மாற்றங்கள் சில குறிப்பிடத்தக்கவை ..சீனாவின் எழுத்தறிவின்மை கணிசமாக குறைந்தது. உயர்நிலைப் பள்ளியில் கற்ற மாணவர் எண்ணிக்கை பலமடங்காக உயர்ந்தது .விவசாயி ,தொழிலாளி வீட்டு பிள்ளைகள் கல்லூரிக்கு சென்றனர்.

 👩‍💻👨‍💻இன்றைய புதிய கல்விக்கொள்கை அந்த காலகட்டத்தை நம் கண் முன்னே நிறுத்துகிறது. 'பயந்த சர்வாதிகாரிகளாகிய' நாம் வாய்மூடி மௌனியாய் பார்த்திருக்கிறோம். பொதுத்தளத்தில் பல கல்வியாளர்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.இருப்பினும்  இந்த கார்ப்பரேட் உலகத்தில், இந்த சர்வாதிகாரத்தின் முன்பு.. ஒரு #மாவோ மட்டும் போத மாட்டார் என்றே தோன்றுகிறது.

🌍"இந்த உலகம் நம்முடையது .
இந்த தேசம் நம்முடையது .
இந்த சமூகம் நம்முடையது .
நாம் பேசாவிட்டால் வேறு யார் பேசுவார் ?
நாம் #செயல்படாவிட்டால் 
நமக்காக வேறு யார் செயல்படுவார்??"
       #மாவோ.

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு