41.பச்சைக் கனவு *லா.ச.ரா

🌳🌳🌳🍁🍁🌲🪴🌱☘🍂🍃🌴🌾🌿🌳🌳
புத்தகம்- பச்சைக் கனவு
 ஆசிரியர்-- #லா.ச.ராமாமிருதம்.
#வகை -- சிறுகதைகள்
பக்கங்கள்-- 200
 ❤கிண்டிலில் படித்தது .11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. ஏறக்குறைய பதினைந்து வருட கனவுகள் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார் முன்னுரையிலேயே கனவின் நாடகத்தில் யாரோ தன்னை இழுக்கிறார்கள். சரணடைய கை கூப்பி எதிரே பார்த்தால் அத்தனை முகமும் அதே முகம். அவருக்கும் அதே முகம் 😊அடையாளம் உதயமாகிறது🙏🏻 ஆனந்தக்கூத்தன் ஆகிறார். அந்த முகத்தை அனைவரும் காணவே தன் கதைகளில் மனித மனங்களின் நுண் உணர்வுகளை வாழ்க்கைச் சம்பவங்களில் நமக்கு விவரிக்கிறார் .
❤தெரியும் வரை கனவு காண்பாய் தெரிந்தபின் களவு காண்பாய்.
கனவு காட்டும் களவின் உளவுமுகம் கண்டு கொண்டதும் நீயும் ஆனந்தக் கூத்தனாகி விடுவாய்.#பிறகு_யாரைப்_பற்றி_உனக்கென்ன_?   ❤💙💃💃💃❤❤💙

#பச்சைக்_கனவு
முதல் கதையிலேயே எத்தனை திருப்பங்கள்🌲 ஏன் சூரிய ஒளி ,நிலவின் ஒளி இரண்டுமே பச்சை நிறமாக தெரிகிறது  என்று பார்த்தால் அவருக்குக்  கண் பார்வை இல்லை. பத்து வயதில் தாயை இழந்து, பின் கண்ணை இழந்த திருப்பம். கேட்கும் திறன், பேசும் திறன் அற்ற மனைவி அவரின் இழப்பு என்று தொடர்ந்து, இரண்டாம் மனைவியிடம் பேசும்பொழுது குழந்தை  பிறந்தால் என்ன பெயர் வைப்போம் ?என்ற கேள்விக்கு #பச்சை என்கிறார்.😍
#2.அபூர்வ ராகம்..🎼 கடமையைச் செய்யத் தவறிய ,கண்ணால் கண்டிராத தகப்பனை விரும்பும் மனிதனின் வாழ்க்கைக் கதை. அதற்கு உதாரணமாக,  உலகத்தில் இல்லாத கஷ்டத்தை எல்லாம் கொடுத்து, தன்னை படாத படுத்தி வைத்தாலும் அந்தக் கடவுளை நம்பும் தன் தாயை காட்டுகிறார். தலைமுடிக்காகத் தன் உயிரையே விட்டுவிடத் துணியும் மனைவியை  அபூர்வ ராகம் என்கிறார். 
#அம்முலு
கணவனை இழந்து,தன் அண்ணன் வீட்டிற்காக உழைக்கும் பெண்ணின் கதை. மறுமணம் செய்வதாக முடித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் .அந்த நாளின் கலாச்சாரத்தைக்  காப்பதாக கதை முடிவு உள்ளது.
💙#தாக்ஷாயணி
 இசை ஞானம் பெற்ற ஏழை பாட்டு வாத்தியார், பணக்கார வீட்டுப் பெண்ணை மணந்து எதிர்நீச்சல் போடும் போது காசநோய்😔.அச்சமயத்திலான கணவன்,மனைவிக்குள்ளான உரையாடலே கதை.பாலமாகவும் , நம்பிக்கையாகவும் அவர்கள் மகன்❤
#பாற்கடல்
தலை தீபாவளிக்கு உத்தியோக நிமித்தமாக பிரிந்திருக்கும் கணவருக்கு எழுதும் கடிதத்தில் தன் கூட்டுக் குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினர்களையும் அறிமுகப்படுத்தி விடுகிறார் புதிய மருமகள். அந்த மாமியார் கதாபாத்திரம் 🙏🏻
#மேகரேகை
நோயாளியின் மனக்குமுறலோடு ஆரம்பிக்கும் கதை, அவர் கனவில் மேகத்தைச் சுற்றி தோன்றும் வெள்ளி ரேகையை நம்பிக்கை ரேகையாக மாற்றி முடிகிறது. 💭❤

#மண்
 ❤முதல்முறையாக அவருடைய வழக்கமான நடையில் இல்லாத கதையை வாசிக்கிறேன்.புத்திர சோகம் நிறைந்த கதை.சம்சாரியின் வார்த்தைகளில்..
//நம்பிக்கை பூட்டுதுனா அப்புறம் என்ன இருக்குது?//❤

#சுமங்கல்யன்
  முதல் திருமணம் தோல்வியில் முடிந்தாலும் இரண்டாம் வாழ்க்கையைத் தொடரும் உணவுப்பிரியரின் கதை.

💙❤ #சாட்சி
"தட்டாமாலை தாமரைப்பூ" என சிறு வயது விளையாட்டுப் பாடலோடு தொடங்கினாலும், கதை மனைவியை இழந்த ஒருவர் அலுவலகத்தில் பணிபுரியும் விதவையை    
வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்கிறார்.ஆனால் அவர்கள் மனமே(சமுதாயத்தின் மனம்?)அவர்களை பயமுறுத்தி பிரிக்கிறது. 🙆‍♀️ 

#சாவித்ரி
அறுபதாவது திருமணம் செய்து கொள்ளும் சாவித்ரியின் நினைவலைகள்.புத்திர சோகம் இழையோடுகிறது இக்கதையிலும்.
❤❤❤
ஒவ்வொரு கதையைப் படித்து முடித்த பிறகும் இதில்  வேறு ஏதோ கருத்தைச் சொல்லி இருக்கிறார். நம்மால் தான் புரிந்து கொள்ள இயலவில்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது.
#நம்பிக்கையே நல்லது.
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. 
கிண்டிலில் வாய்ப்புள்ளவர்கள் வாசிக்கலாம்😍👍🏻

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு