42.குக்கூ

🌴🌴🌴💙💜💙😍😍😍
#கவிதைத் தொகுப்பு 
புத்தகம்..#குக்கூ
ஆசிரியர்..மீரா(மீ.இராசேந்திரன்)
வகை..கவிதை தொகுப்பு 
பக்கங்கள்..152
 ✒ஆசிரியரைப்பற்றி..... கவிஞர் மீராவைத் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்தவர் அறிஞர் அண்ணா. மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர் மீராவின் கனவுகளில் ஒன்று பெங்குயின் நிறுவனம் போல புத்தகங்கள் வெளியிடுவது .அதைப் போலவே அவர் அன்னம் பதிப்பகம் மூலம் பல கவிதை நூல்களையும், பல சிறந்த நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
மீராவின் கனவுகள்+ கற்பனைகள்= காகிதங்கள் ,கவிதைத் தொகுதி எழுபதுகளில் இளைஞர்கள் பலரின் தூக்கத்தை கெடுத்தது .
அவரது கனவுகளில் காவிரியை போலவே வால்கா நதியும் கரை புரண்டு ஓடியது .தமிழ் கவிஞர் பலர் மீராவை தொடர்ந்து தாம் நேசித்த நாடுகளை தம் அன்னையாய், தோழியாய், தோழனைப் பாடி தமிழ்க் கவிதை உலகில் புதுமையைப் புகுத்தினர். 
' ஊசிகள்' மீராவின் குறும்பாக்கள் தொகுதி.

❤ஹைக்கூ எனும் ஜப்பானியக் கவிதை வடிவத்தை தமிழில் ஒரு புதிய வடிவமாக தனித்தன்மையுடன் பின் பற்றி எழுதப்பட்டுள்ளது.  ❤ சிறிய வடிவம் படிமக் காட்சிகள்,பிராணிகளின் செயல்கள் மூலமாக வாழ்வின் வினோதங்களை வெளிப்படுத்துவது, காட்சிகளில் வாழ்க்கை .தத்துவத்தை தரிசித்தல் போன்ற பண்புகள் இதில் இருப்பதாக கவிக்கோ அப்துல் ரகுமான் குறிப்பிடுகிறார்.

கவிதைகள். 
கண்ணுப் பாப்பா
கடித்து வைத்தது
சாமிக்குப் பக்கத்தில் 
 மிட்டாய் பெரிசாய்
எறும்புகள் வந்தன வரிசையாய்
சாமி கும்பிட ❤
பழமை புதுமை
இரண்டுக்கும் நாங்கள் பாலம்
எலி வாகனம்
ஹெலிகாப்டர் வாகனம்
இரண்டையும் கொண்டாடும்
எங்கள் காலம்!

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு