43.பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும்

👧👨‍🦱👩‍🦱👩‍🦳👨‍🍳👩‍🔧👩‍🔬👩‍💻👩‍✈️🕵‍♀️💂‍♂️🤰👰
புத்தகம்..பெண்ணியம் வரலாறும், கோட்பாடுகளும். 
ஆசிரியர்கள்.. சாரா காம்பிள்_ டோரில் மோய் 
தமிழில்#ராஜ்கௌதமன்
வகை..கட்டுரைத்தொகுப்பு
பக்கங்கள்.. 108
👩‍💻இது ஒரு மொழிபெயர்ப்பு நூல்.பெண்ணியம் தொடர்பாக தேடிய போது கூகுள் பரிந்துரைத்த நூல். ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கியது. படிப்பதற்கு மிகவும் பொறுமை தேவைப்படும் புத்தகம்.😔
 முதல் பகுதி தொடக்ககால பெண்ணியம் (ஸ்டீபன் ஹாட்ஜ்ஸன்  ரைட்) இரண்டாவது கட்டுரையான முதலாம் அலை பெண்ணியம் (வேலரி ஸாண்டர்ஸ்),மூன்றாவது கட்டுரை ..
இரண்டாம் அலைப் பெண்ணியம் (சூ தார்ன்ஹம்),நான்காவதாக..
பின்னைப்பெண்ணியம்(சாரா) கட்டுரையோடு அனைத்தையும் தொகுத்து சாரா காம்பிள் அவர்கள் கொடுத்துள்ளார்கள். 

16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்துதான் முதன்முதலாக பெண்கள் தங்கள் சொந்த குரலில் விவாதிக்க தொடங்கி இருக்கிறார்கள். தந்தை வழி சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக பெண்கள் திரட்டிய மகளிர் குழுமங்கள் , மீட்புவாதம் ஆகியவற்றை  விவரிக்கின்றன. 

❤1850 முதல் 1860 வரை இங்கிலாந்தில் விக்டோரியா ராணி காலத்து பெண்களுக்கு பெண்ணிய செயல்பாட்டில் மிக முக்கியமான ஆண்டுகளாக குறிப்பிடுகிறார்கள்.
❤இரண்டாம் பகுதியில் #டோரில்_மோய் இந்த நூலில்  பெண்ணிய விமர்சன நடவடிக்கைகளில்  நெறிமுறைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளைப் பற்றிய விமர்சனங்களை முன் வைக்கிறார்.
👩‍💻ஆய்வுக் கட்டுரைகள் அல்லது நூல்களின் பெயர்களும்.. ஆசிரியர்களும்.
1. பாலியல் அரசியல் கேட் மில்லட்
2. பெண்களைப் பற்றி சிந்தித்தல் ( 1968 )  மேரி எல்மான்.
3.  புனைகதையில் பெண்கள் பற்றிய பிம்பங்கள் - பெண்ணிய நோக்கு நிலைகளில் ( 1972)
4. பெண்ணிய இலக்கிய விமர்சனம் - - -ஆனட் கொலோட்னி
5. தங்களுக்கான ஓர் இலக்கியம் - -எலைன் ஷோ வால்டர் .
6.  மெடுஸாவின் மாயச் சிரிப்பு...ஹெலன் சிக்ஷு.
7. மற்ற பெண் பற்றிய தொலைநோக்குப் பார்வை லூசி இரிகரெ.
8. விளிம்பு நிலைமையும் தலைகீழாக்குதலும்.. ஜூலியா கிறிஸ்தவா.
பெண்கள் தங்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு,கல்வி,வேலை போன்றவற்றில் சம உரிமைக்காக  
போராடிய வரலாறே இக் கட்டுரைகள் என நான் புரிந்து கொள்கிறேன்.
கருத்துகள் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும் என்றாலும் படிப்பதற்கு சிரமமாக இருந்தது.
😍👍🏻

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு