44.கடலுக்கு அப்பால்

❤❤❤❤❤❤❤❤❤❤
⛵⛵⛵⛴🛳🛶🚤🛥⚓
#கிளாசிக்
வகை.. நாவல்
புத்தகம.. கடலுக்கு அப்பால்
ஆசிரியர்..#ப.சிங்காரம் 
பதிப்பகம்..டிஸ்கவரி புக் பேலஸ் 
பக்கங்கள்.. 196

💙 ஆசிரியரைப் பற்றி
 மதுரை  சிங்கம்புணரியைச் சேர்ந்தவர். கடலுக்கு அப்பால்(1950)
புயலிலே ஒரு தோணி(1962) என்ற இரண்டு  நாவல்களை மட்டுமே படைத்தவர்.
 
அவரது நூல்களை வெளியிடுவதில் பெற்ற கசப்பான அனுபவங்களால் எழுத்தையே நிராகரித்திருக்கிறார் இறுதிக்காலம் வரை புகழ் வெளிச்சத்திற்கு வராதவர் முதல் புலம்பெயர்ந்த நாவலை எழுதிய
சாதனையாளர் கடைசியாக ஒரு நேர்காணலுக்குக் கூட மறுத்திருக்கிறார்.அவருக்கு பிடித்த நாவல் எனக் குறிப்பிட்டிருப்பது #ஹெமிங்வேயோட ."எ ஃபேர்வெல் டூ ஆர்ம்ஸ்".

💙கதையைப் பற்றி...
புலம்பெயர்தல் என்பது சமூக வளர்ச்சிக்காக ,அல்லது தனிமனித  வளர்ச்சிக்காக  என்று இருந்தால் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும், ஆனால் வறுமையால் வாடிய நிலையிலும், போர் காரணங்களுக்காகவும் தாயகத்தை விட்டு செல்லும் புலம்பெயர்  மனிதர்கள்தான் தற்போது அதிகமாக இருப்பார்கள்.
கிராமத்திலிருந்து நகரத்திற்கு பிழைப்பிற்காக வந்தவர்களே
தாம் பிறந்து,வளர்ந்த இடத்தை இழந்த ஏக்கத்தை சொற்களால் விவரிக்க இயலாது.அப்படி இருக்கும் போது ,திரும்பிவரும் உத்தரவாதம் இல்லாத நிலையில் கப்பலேறிய தமிழர்களின்  மன நிலை ?

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் நடந்த கதை. கதையின் நாயகன் செல்லையா வட்டித் தொழில் செய்யும்  வயிரமுத்து பிள்ளையின் கடையில் கொண்டு வேலை , அதாவது வட்டி வசூல் செய்து தரும் வேலை செய்வதற்காக அழைத்து செல்லப்படுகிறார்.

🌍போர் சமயத்தில் நேதாஜி  படையில் முதலாளியிடம் சொல்லாமல் சென்று சேர்ந்து லெப்டினன்ட்  பதவி வரை சென்றடைகிறார்.  
ராணுவத்திற்கு சென்றதனால்
தனது மகளை செல்லையாவிற்கு மணமுடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்கிறார்.தனது ஒரே மகனை குண்டு வீச்சில் இழந்தவர் மனதளவில் செல்லையாவை உறவாக ஏற்றுக் கொண்டு இருந்தவர்.இதனால் பாதிக்கப்பட்ட செல்லையாவின் மனநிலையை, மனவருத்தத்தை எளிதாக வாசிப்பவர்களுக்கு கடத்துகிறார்.
இறுதியாக முதலாளிக்கும்,செல்லையாவுக்கும்  இடையில் நடைபெறும் சொல்லாடல், மனித மனதின் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்துகிறது. முதலாளியுடைய அனுபவ பேச்சை மறுக்க முடியாமல் போகும் செல்லையாவைப் போல அவருடைய வாதம் நம்மையும் கட்டிப் போடுகிறது.

🌍கதையில் நண்பனாக வரும் மாணிக்கத்தின் பகுதி மிகவும் சுவாராசியம். தற்காலத்தில் உள்ள நண்பர்கள் மச்சி என அழைத்து ஆறுதல் கூறுவதைப் போல தமிழ் இலக்கிய நயத்தோடு பேசும் பகுதி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. நேதாஜியின் ஐ.என்.ஏ படை செயல்பட்ட விதம் ஜப்பானியர்களை எதிர்ப்பது, பிரிட்டிஷ் ஆட்சி உள் நுழைந்தது என அரசியலும் இப்புத்தகத்தில்  விவரிக்கப்பட்டு உள்ளது.

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு