45.புயலிலே ஒரு தோணி

🛥⛴🛳🚤🛶⛵⚓💙💜💙💜⚓
#நாவல் 
புத்தகம் ..#புயலிலே_ஒரு_தோணி
#ஆசிரியர்_பசிங்காரம்.
 பக்கங்கள்.. 318
வகை..நாவல்
பதிப்பகம்... டிஸ்கவரி புக் பேலஸ்.
எனது முதல் பார்வையில்..(ஏனெனில் 
பலமுறை வாசிக்கத் தகுந்த நூல்)

நாவலைப் பற்றி விமர்சனம் வந்ததா? என்ற கேள்விக்கு ஆசிரியரின் பதில்.. //  ஒரு பாத்திரம்  தன் மனத்துக்குள் யோசிப்பதை எழுதும்போது ஒற்றை குறிக்குள் போடலைங்கிறதுக்காக  'கண்ணதாசன்' பத்திரிகையில் ஒருத்தர் யார் யாரிடம் பேசுறாங்க என்பதுகூட புரிதலை..  குழப்பமாயிருக்குன்னுனுஎழுதியிருந்தார். நம்ம ஆளுகளுக்கு எல்லாத்தையும் வெளிப்படையா பெருவெட்டாகச் சொல்லணும் தமிழ்ல dash -க்கும் hyphen _க்கும்
 வித்தியாசமே பலருக்கு புரியல //ஆசிரியரோட வருத்தத்தை  வெளிப்படுத்திய வரிகள்!
இது போன்ற சிறந்த கலைப்படைப்புகளை வாசிக்கும் ஒருமுறை மட்டுமே வாசித்து கருத்து சொல்லவே முடியாது.
முதல் இரண்டு  அத்தியாயங்களை படிக்கும்போது புதிய, பல மொழி சொற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால் சிலருக்கு அப்படித் தோன்றலாம். 

புலம் பெயர்ந்த மனிதர்களின் மனம் எவ்வளவு தான் வசதிகளை அனுபவித்தாலும், தாய்நாட்டின் நினைவலைகளில் ஊசலாடிக் கொண்டிருக்கிறார்கள் அன்றும் இன்றும்.
⚘⚘⚘⚘
#நுனை (முதல் பகுதி) 
இந்தோனேஷியாவின் மேடான் நகரில் கெர்க்ஸ்டார்ட் வீதியில் ஜப்பானிய துருப்புகள் நுழைவதை வேடிக்கை பார்க்க வரும் பாண்டியன் ... பார்வையில் ஆரம்பிக்கிறது கதை.
போர்க் காலங்களில் மனிதர்கள் அனுபவிக்கும் அவலங்களை பாண்டியனின் பார்வையில் நம்மை காண வைக்கிறார்.

#அரும்பு_(இரண்டாம் பகுதி)
 பாண்டியன் பினாங்கிற்கு செல்லும்  கப்பல் பயணம்.. நண்பர்கள் தங்கள் முதலாளியின் கதையை விபரிப்பது வாழ்வு நிலை இல்லை என்பதற்கு உதாரணத்தையும் வர்க்க வேறுபாடு பார்க்காத பெண் தர்ம குணத்தையும் சிலம்பம் சமயத்தில் தன் குழந்தையை அடித்து விட்டு வந்ததை நினைத்து மனம் கூறுவது போன்ற பல நெகிழ்ச்சியான பகுதிகளில் நம்மையும் உடன் பயணிக்க வைக்கிறார்.

//மாலிக் கபூரும்,...  வெங்கோஜி?யும் ,டூப்ளேயும்,கிளைவ்'வும்  விருப்பம் போல வலம் வந்து தமிழ் நாட்டை சூறையாட முடிந்தது ஏன்?? நம் மூதாதையர் போக வாழ்க்கையின் விளைவு .நான் குறிப்பிடுவது ஆட்சி மட்டத்தில் இருந்தவர்களை...பெரும்பாலான தமிழர்கள் அன்றும் இன்றும் பஞ்சையரே😔.// 
ஆசிரியர் தன்னைச்சுற்றி நடப்பதை மட்டுமல்லாமல் உலக வரலாற்றை கூர்ந்து அலசியிருக்கிறார் என்பது இப்பகுதியில் நமக்கு விளங்குகிறது .இது மட்டுமா?
தமிழன்,தமிழ் என்று  வெறும் பெருமை மட்டுமே பேசுவதையும்
விளாசித்தள்ளுகிறார்.
⚘⚘⚘
#முகை(மூன்றாம் பகுதி)
🌷
பாண்டியனின் போர்ப் பயிற்சியோடு தொடங்கும் பகுதி. ஜாராங் முகாமில் பதவி,கர்னல் கலிக்குஸுமான்  சந்திப்பு,  நேதாஜியுடன் சந்திப்பு,தொலைந்த கடிதத்தை மீட்பது என பல சாகச காட்சிகள் நிறைந்த பகுதி.
தமிழ் வீரர்களை காட்டிக்கொடுக்கும் சுந்தரத்தை நண்பர்களுடன் சேர்ந்து நஞ்சு அருந்த வைக்கும்  காட்சியும், விலாசினியிடமிருந்து கடிதத்தை மீட்க முயலும் காட்சியும் ஜேம்ஸ்பாண்ட் கதையை நினைவுபடுத்துகிறது.

பாங்காங் மூன்லிங்
ஓட்டலில் நடைபெறும் காட்சிகள் வேறு ரகம்..பாண்டியன் சுமத்திரா வுக்கு போய் விட்டு ஊருக்குத் திரும்பிச் செல்லும் தீர்மானத்தோடு  இப்பகுதி முடிகிறது.
🌷🌷🌷
#மலர்(நான்காம் பகுதி)
🌷 
யுத்த கைதியாக இருந்த டச்சுக்காரர் டில்டனின்  மகனின் சந்திப்புக்கு பிறகு இந்தோனேஷியா விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கும் பாண்டியனின்  முடிவு....
//ஒன்றை விட்டொன்று பற்றிப் பாசக்கடற்குளே வீழாமல்  மனதற்ற பரிசுத்த நிலையை அருள்வாய் //என்ற தாயுமானவரில் தொடங்கும் பாண்டியனின் சிந்தனை,
#எல்லாம் யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதாக முடியும். என்ற தத்துவத்தோடு முடிகிறது.

💙💙🌷🌷💙💙

பாண்டியனின் பால்யகால நினைவுகள் சின்ன மங்கலத்தில்
நடைபெற்றவை புன்னகையோடு நம்மை அந்த காலகட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது.

ஆசிரியருக்கு சிலப்பதிகாரத்தின் மீது என்ன மதிப்பீடோ தெரியவில்லை. தனது இரண்டு நாவல்களிலும் பகடிக்கு உட்படுத்தி இருக்கிறார்.     
தமிழ் இலக்கிய ஒப்பீடுகள் உடன் தத்துவ விசாரணைகளும் .. விவரிக்க வார்த்தைகளே  
இல்லை.
பாண்டியனின் சிந்தனையில் #வைர_வரிகள் 
  //மானிடனே !நண்பனே! நீ எதை விட்டு எதைப்பற்றினாய்? நான் சாதி ,சமயத்தை விட்டு சங்கத்தையும் கட்சியையும் பற்றினேன். காணிக்கை செலுத்த மறுத்து சந்தா கட்டுகிறேன். நெற்றியில் திருநீறு பூசுவது விடுத்து சட்டையில் சின்னம் அணிகிறேன்.
 எதைப்பற்றினாய்? இது எவ்வகையில் நயம்? மூடநம்பிக்கை மதத்தினும்  #அறிவு_ நம்பிக்கை_விஞ்ஞானம் எவ்வாறு மேம்பட்டது ??
பொருளாசை ,புகழாசை அழியுமோ? அழியாது. சொல்வீர்! விஞ்ஞானப் பேரறிஞீர் சொல்வீர், வடகோடு உயர்ந்தென்ன, தென்கோடி சாய்ந்தென்ன வான் பிறைக்கே?//
💙🙏

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு