46.அம்மாவின் பிறந்த நாள்

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳💙💙🌳🌳🌳
புத்தகம் ..#அம்மாவின்_பிறந்த_நாள்
 ஆசிரியர்.#சிந்து_சீனு 
வகை - #கவிதைத்தொகுப்பு பக்கங்கள்.. 72 
பதிப்பகம்..அன்பு நிலையம், வேலூர். 

 சாரல் புத்தக மையம் 'நந்தகுமார்' அவர்கள் அனுப்பியது .
எனது மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி .ஆசிரியரின் முதல் முயற்சி .

நம் வாழ்க்கையில் சந்திக்கும் நபர்களை நிகழ்வுகளை ஒரு டைரிக் குறிப்பில் எழுதி வைப்போம் அல்லவா, அதுபோல ஆசிரியர் அவற்றை கவிதை நடையில் எழுதி வைத்துள்ளார் அறிவொளி இயக்க காலம் தொட்டு தற்போதைய காலம் வரை கவிதைகளில் இடம்பெற்றுள்ளன.
💖
//தராசு 
இரண்டு பக்கம்
சரியாக இருந்தாலும் 
இருக்கத்தான் செய்கிறது 
கலப்படம்//  
நச்சென்ற சில கவிதைகள் ..இது போன்று குறுகிய வரிகளிலேயே தனது கருத்தை வெளிப்படுத்த முடிந்தாலும் பல கவிதைகள் விரிவாகவே பதிவு செய்யப்பட்டு உள்ளன.
உதாரணமாக ..
*விவசாயிகள் போராட்டம், 
*அரசுப்பள்ளி மாணவிக்கு ஆறுதல், 
*எரிவாயு குழாய் விவசாய நிலத்தில்,..,
*வாக்காளர்கள்-பிராய்லர் கோழிகள்,
*தொலைக்காட்சியில் ஜோதிட நிகழ்ச்சி ...எனப் பல..

//கோபம் வரத்தான் செய்கிறது .
2 பென்ஷன் வந்தாலும், மூன்று மகன்கள் நன்கு சம்பாதித்தாலும், இரண்டு மருமகள்கள் வேலைக்குச் சென்றாலும் ,
பக்கத்து தெருவுக்கு மட்டும்
 3 கட்சிக்காரர்கள் பணம் கொடுத்து இருக்காங்க ஓட்டுக்கு..
 நம்ம என்ன இளிச்சவாயா??//

தேர்தல் காலங்களில் பல இடங்களில் நம் காதில் கேட்டது தான்.அருமையான கவிதைப்பதிவு.😊

அடுத்த கவிதை ..
//காவி சாயம் 
பெரியார் சிலை மீது

...
வர்ணங்களே வேண்டாம் என்ற அவரின்   உடலில் வண்ணங்கள் பூச வேண்டாம்.// 
முதல் வரியும் கடைசி வரியுமே அவரது கருத்தை வெளிப்படுத்த முடிந்தாலும்..

//மனமிருந்தால் மரியாதை செலுத்து..
இல்லாவிடில் கடந்து செல்// 
என்று அவர் ஆதங்கத்தை மேலும் சில வரிகளில் சேர்த்துள்ளார். 

🦅காக்கைக்கு உணவு  வைக்கும் கவிதையில்...
//நம்பிக்கை இல்லை என்றாலும் சந்தோசமாகத்தான் இருந்தது மனசு// 
என்பதில் மனிதநேயம் ❤.

//ஏதோ செய்கிறது
 என் கண்களும் மனதும்// என்ற கவிதையை  உறவுக்கும் ,நட்புக்கும்
அர்ப்பணித்துள்ளார்💐

சமூக அவலங்களைப் பார்த்து வரக்கூடிய நியாயமான கோபத்தை கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.
நம்மால் என்ன செய்ய முடியும் என்று நினைத்து ப் பார்த்தால்..
//எங்க ஊர் 
  கம்மாயும் கால்வாயும்
  குளமும் வத்தித்தான்          போனது.
....
எத்தனை வேதனைகள் 
இருந்தாலும் 
சிரிக்கத்தான் செய்கிறாள்.
தினமும் என் வீட்டுமுன் 
நிற்கும் செம்பருத்தி//🌺🌺

இப்படித்தான் கடந்து செல்கிறோம் என்று  தெரிகிறது 😊

விமர்சனங்களை சந்தோசமாக ஏற்றுக்கொள்கிறேன் என்ற ஆசிரியர் #சிந்துசீனு விற்கு மேலும் பல படைப்புகள் வெளிவர வாழ்த்துகள். 💐💐 
கவிதைகளை விரும்புவோர் ஒருமுறை படித்துப் பாருங்களேன்.👍🏻

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு