47.விடியலை நோக்கி

💙💜💙💜🌳🌳🌳🌳🌳🌞🌞🌞🌞☀️
புத்தகம்... #விடியலைநோக்கி 
ஆசிரியர் ..சிந்து சீனு 
பக்கங்கள் _ 84 
பதிப்பகம் ..அன்பு நிலையம் ,வேலூர் 
வகை.. சிறுகதை தொகுப்பு.

சாரல் புத்தக மையம் நந்தகுமார் அவர்கள் அனுப்பிய புத்தகம். அம்மாவின் பிறந்தநாள் என்ற கவிதைத் தொகுப்போடு இச்சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார் .
ஆசிரியரின் முதல் சிறுகதைத் தொகுப்பு. இதில் 9 சிறுகதைகள் உள்ளன.
தூத்துக்குடி வ .உ. சிதம்பரம் கல்லூரி தமிழ் பேராசிரியர்.. முதுமுனைவர். ஐயப்பன் அவர்கள் வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்.
❤#புதைந்த_மனிதர்கள் 
முதல் சிறுகதை கேரளாவில் டீ எஸ்டேட்டிற்கு  வேலைக்குச் சென்று நிலச்சரிவில் மறைந்த மனிதர்களின் கதையைப் பேசுகிறது.

🎈#அப்பாவின்_வழியில் மகனும் மரத்திற்காகவும், மண்ணிற்காகவும் கொடியேந்தும் கதை.

❤#கிரிவலம் தங்கையின் குடும்பத்தோடு கிரிவலம் சென்று அல்லல்பட்டு திரும்பும் குடும்பத் தலைவனின் கதை. கடைசியில் அப்பாவின் வார்த்தைகள்// அண்டத்திற்கு அப்பாலுள்ள சுடரினை பிண்டத்துள் காண்பாயடி//  நிதர்சனம்.🙏🏻

❤#முருகன்_முடி_திருத்தகம்.. இக்கதையும் உடன்பிறந்தோர்க்காக பாடுபடும் எளிய மனிதனின் வலியை கூறுவது.

❤#அரசியல். காசு கொடுத்து அழைத்து செல்வதை பகடியோடு விளக்கும் கதை.
#விடியலை_நோக்கி ராணுவத்தில் சேர ஆசைப்படும் இளைஞன். _ வெளியுலகத்தில் எதிர்பாராமல் எதுவும் நடக்கலாம் என்பதையும், அதையும் எதிர்கொண்டு முயற்சி  செய்து வெற்றியடைய வேண்டும் என நம்பிக்கை அளிக்கும் கதை.
#மாமி /பணமிருக்கும் மனிதரிடம் குணம் இருப்பதில்லை/ என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

❤#வள்ளி கல்குவாரியில் நடக்கும் கதை .குவாரி குட்டையில் விழுந்த டிரைவரின் குழந்தைகளை காப்பாற்றும் வலது கை குறைபாடு உள்ள வள்ளியை கணக்கு பிள்ளையால் மட்டுமல்ல படிக்கும் அனைவராலும் மறக்கமுடியாது.
#ஆணவக்காரன்..சாதி மறுப்பு திருமணம் செய்யும் ஒரு முற்போக்குவாதியின் கதை.
இதில் ஒரு கதையை கூட கற்பனையில் உதித்தது என்று கூற முடியாது. நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் வாழ்வில் நடந்தவையாக தான் இருக்கும்.  நாமும் இத்தகைய மனிதர்களை கடந்து வந்திருப்போம். வாசிக்கும் ஒவ்வொருவரின் மனதையும் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கச் செய்யும்.இதுவே இத்தொகுப்பின் வெற்றியாக இருக்கும்.

முதல் முயற்சிக்கு ஆசிரியருக்கு வாழ்த்துகள் 💐💐💐

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு