48.அழகோ அழகு

🌍🌎🌏🌏🌏🌏🌏💜💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
புத்தகம் ..#அழகோ_அழகு
ஆசிரியர்.. . வெ.இறையன்பு
வகை ..சிறுகதை தொகுப்பு
பக்கங்கள் ..116

#பேசும்_புத்தகம் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகத் தேர்ந்தெடுத்த புத்தகம். (இதில் நேர்மை என்னும் சிறுகதையைத் தான் தேர்ந்தெடுத்தேன்.)

14 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. 
ஒவ்வொரு கதையிலும் ஒரு நீதி.#அழகோ_அழகு சிறுகதையில்  " புற அழகை விட அறிவு தரும் அழகு நிரந்தரம் "என்பது போல ஒவ்வொரு கதையும் ஒரு படிப்பினையைத் தருவதாக அமைந்துள்ளது. 
கதைகளின் சுருக்கத்தை விட ஒவ்வொரு கதையிலும் என்னைக் கவர்ந்த சில வரிகளை இங்கு பதிவிட விரும்புகிறேன்..
#எட்டாவது_மலை_படைப்பிரிவு
//சோகத்தை தகவலாக அளிப்பவனின்  துயரம்.. அனுபவிப்பவன்  துயரத்திலும் அதிகம்.//
#இறந்தால்_ஆயிரம் 
//மூல நிர்வாகத்திலிருந்து ஒதுக்கப்படுவதில்  உள்ள மிகப் பெரிய தண்டனையே ஒதுக்கப்பட்டவர்களே உதவுவதற்காக ஒதுக்கப் படுவார்கள் என்பது தான்//🙄
#கைமுறுக்குகாரி
//நிராயுதபாணியாக நின்ற போதே சமாளித்துக் கொண்டு ,எழுந்து நின்று போராடி ஆகிவிட்டது ..இப்போது இதுநாள்வரை சேகரித்த அனுபவமும் பெயரும் உழைப்பும்.... இருக்கும்போது கலங்க வேண்டிய அவசியம் என்ன?//👍

 ❤#தேடல்
//திரும்பப் பெற முடியாத முடிவல்ல சந்யாசம்.. அது வழி. சன்னியாசம் என்பது கட்டுப்பாடு அல்ல.... அதுவே பூரண சுதந்திரம்.//
#கடவுள்
//நகைச்சுவை என்பது பெரும்பாலும் அடுத்தவர்கள் இயலாமையை விமர்சிப்பது தானே//🙈
#அழகோ_அழகு
//ஒவ்வொரு அழகும் ஒரு  அவ லட்சணத்தை துணைக்கழைக்ககிறது போல..//
#வழி_விடுங்கள்
//கொஞ்சம் படித்து வசதிகள் உருவானவுடன் தன்னுடைய அடையாளங்களை அமுக்கி மூடிக் கொள்பவர்கள் அதிகம்//
❤💖
#நேர்மை
//மேன்மையைப் பற்றி எழுதிவிட்டு, பெருந்தன்மையை பற்றி கதைத்து விட்டு, முகத்தை புதை மணலில் புதைத்து கொள்கிறார்களே//
#நுனி_இலைப்பனித்துளி.
//அழுக்குக்குள்ளும் அழகு இருக்கிறது. நான் அழுக்கடைந்து என் உலகத்தை அழகாக்கும் முயற்சியே என் கலை.//
#முதல்_கோணல்_முற்றிலும்_சரி
//புறக்கணிக்க முடியாத அளவிற்கு வளர்வது ஒன்றுதான் நம்மை திடப்படுத்திக் கொள்வதற்கான வழி//👍
12 #சந்யாஸ்
//உலகத்திலிருந்து ஓடி ஒதுங்குதல் அல்ல சந்நியாசம் .. அது உலகத்திலுள்ள ஒவ்வொன்றையும் இன்னும் ஆழமாக ஒவ்வொரு துளியாக உள்ளே வாங்கி நாமே உலகமாக மாறி போவது//
#கூச்சம்
//கொடுத்தே பழக்கப்பட்ட கைக்கு முதல்முறையாக வாங்குவதற்கு நடுக்கமும் வெட்கமும்//

படிப்போம் வாழ்க்கையை👍❤

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு