49.தாயுமானவள்

👰👰👰🌍🌎🌏👰👰👰
💜💙💜💙💜💙
புத்தகம். .#தாயுமானவள் 
ஆசிரியர் .#நாகூர்ரூமி
 வகை ...நாவல்
பக்கங்கள் ..112 
பதிப்பகம் .LKM பப்ளிகேஷன், தி.நகர்.
வேலூர் நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் வாங்கியது.

💖கதையைப் பற்றி..
தாயை இழந்து பாட்டியால் வளர்க்கப்பட்ட மகனின் கதை..
இல்லை அந்த மகனை சிரமங்களுக்கு இடையில் வளர்த்த பாட்டியின் கதை என்பதே சரி❤
 நாவலாசிரியர் தன் பாட்டியோடு பெற்றுக்கொண்ட மறக்கமுடியாத அனுபவங்களையே கதையாக எழுதியுள்ளார்.

இஸ்லாமிய  குடும்பங்களின் வாழ்வியலை கண் முன் நிறுத்துகிறார். 
🏃‍♂️🤺🕺🧘‍♂️
திண்ணை தாண்டுதல், பொன்வண்டு,கோலி விளையாடுதல்,நெல்  பத்தாயம், பேருந்தில் அரை டிக்கெட் எடுக்க... என்பது போன்ற பழைய கால நினைவுகளை மீட்டு எடுக்கிறது.
தாய் இறந்தது புரியாத வயதில் //ம்மி தூங்குது// என்று கூறுவது ,வவ்வா மீன் விலை பேசுவது, மௌலது ஓதும் நிகழ்ச்சி, நில வழக்கு என சோகம் ,நகைச்சுவை, வலி என அனைத்து உணர்ச்சிக் குவியல்களோடு கதை நகர்கிறது.
பாட்டியின் நிர்வாகத்தை Repaying capacity, resources என ஒப்பிட்டு எழுதி இருப்பது சிறப்பு. 

பால்ய காலத்தை மீண்டுமொருமுறை அனுபவிக்கவும் ,எள்ளல் நடையில் மனம் விட்டு சிரிக்கவும் நாவலை படிக்கலாம்❤👍🏻

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு