50.தமிழர் தலைவர்

50🌞🌞🌞🌞🌞🌞🌞50
💙💙💙💜💜💜💜💜
புத்தகம்..#தமிழர்_தலைவர் .பாகம் 1
ஆசிரியர் ..சாமி. சிதம்பரனார்.
பதிப்பகம் ...பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்.
பக்கங்கள்.. 300
💖
ஏறக்குறைய மூன்று வருடங்களுக்கு முன்பு வாங்கிய புத்தகம். வாழ்க்கை வரலாறு என்றாலே படிப்பதற்கு அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது என்றும், பிறகு படித்துக் கொள்ளலாம் என்றும் ஒதுக்கி வைத்து விடுவேன் . #மாபெரும்_தமிழ்_கனவு  படித்ததன் விளைவாக #பேரறிஞர் இதனைப் படிக்க வைத்துவிட்டார் .

இந்த நூலின் இன்னொரு சிறப்பம்சம் நூலாசிரியர் எழுதியவற்றை, பெரியாரே படித்துப்பார்த்து திருத்தம் செய்து இருக்கிறார் .(முதல் பதிப்பு 1939).

தமிழர் தலைவர்,  பெற்றோர் பெருமை எனத் தொடங்கிப் பெரியார்  வரை பதினெட்டு கட்டுரைகளில் அவருடைய முடிவுறாத வாழ்க்கை பயணத்தை விவரித்திருக்கிறார் ஆசிரியர்.
//சதாசர்வ காலமும் எங்கள் வீட்டில் இருசமய பக்தர்களாலும், பண்டிதர்களாலும்  காலட்சேபம் செய்யப்பட்டு வந்தது.//
இது பெரியார் அவர்களே தம் குடும்பத்தைப் பற்றிக்   குறிப்பிட்டவை. #அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே... அதனால்தான் பெரியார் சிறிய வயதிலேயே தனது வாதத்தை (விதண்டாவாதத்தை..😍) ஆரம்பித்துள்ளார் போலும்.

பெரியாரின் பெற்றோர் வெங்கட்ட நாயக்கர் சின்னதாய் அம்மையார். கூலி வேலை செய்து ,வண்டி மாடுகள் வாங்கி, சிறு மளிகை கடை வைத்து, படிப்படியாக உழைத்து முன்னேறி இருக்கிறார்கள் .அதிலும் சின்னத்தாய் அம்மாவின்  உழைப்பும் உதவியும் ஆச்சரியப்பட வைக்கின்றன.
❤🔍❤
இளமைப் பருவமும், குடும்ப குறும்புகளையும் தாண்டி துறவுக்கோலம் சென்ற காலத்தில் தான், அவருடைய பட்டறிவால் தனக்கான கொள்கைகளை வகுத்துக் கொண்டு இருப்பார் என நினைக்கிறேன்..😊 தென்னாடு முதல் வடநாடு வரை மக்கள் எப்படி எல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள், அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்று தானே அனுபவித்து உணர்ந்ததாலோ என்னவோ இல்லை அவரின் பிறவிக் குணத்தாலோ  மற்றவர்களைக் காக்க வேண்டும் என களம் இறங்கியிருக்கிறார் இப்பிறவி போராளி.

 பொதுவாழ்வில்  பகுத்தறிவு சிந்தனையாளர்களில் முன்னோடிகளாகவும், நண்பர்களாகவும், கருவூர் மருதையா பிள்ளையும் ,கைவல்ய சாமியாரும்   இருந்திருக்கிறார்கள்.
💖
காந்தியின் வழியில் நடந்து கதர் இயக்கம் வெற்றி பெறச் செய்தது, ஒத்துழையாமை இயக்கத்துக்காக, கோர்ட்டுக்கு செல்லக்கூடாது என்று, தம் குடும்பத்திற்கு வர வேண்டிய பணத்தை இழந்தது கள்ளுக்கடை மறியல் போராட்டம், வைக்கம் போராட்டம் குருகுலப் போராட்டம், என பெரியாரின் போராட்ட வாழ்வு விரிவாகவே விவரிக்கப்பட்டுள்ளது.

 1925இல் காங்கிரசில் இருந்து விலகி சுயமரியாதை இயக்கம் எவ்வாறு தொடங்கப்பட்டது என்ற தெளிவான  விவரம் இதில் இல்லை.  ஆனால் நீதி கட்சியுடன் பெரியார் ஆற்றிய பணிகள் சிறப்பாக  விவரிக்கப்பட்டுள்ளன.
💖
தென் ஆப்பிரிக்கா, மலேசியா, இலங்கை, பர்மா, ஜெர்மனி, ஸ்பெயின் ,இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்கெல்லாம்   சென்று சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைப் பற்றி சொற்பொழிவாற்றியதோடு , அங்கேயுள்ள பொது இயக்கங்கள் பற்றியும் நேரில் கண்டறிந்து வந்திருக்கிறார்.
💖🔥💖
சுதந்திரம் பெறுவதற்கு முன் #குடிஅரசு ,#புரட்சி,#பகுத்தறிவு, #விடுதலை எனப் பத்திரிகை நடத்துவதே பெரும் போராட்டமாகத் தான் இருந்துள்ளது.
💖
பெரியாரைப் பற்றி பேரறிஞர்கள் என்னும் பகுதி மிகவும் சிறப்பு.. அதேபோல் புகைப்படங்களும்..
💖
தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளர்களுக்கெல்லாம்  முன்னோடி, தனக்கென வாழாப் பொது நலம்  நாடிய ,ஓய்வறியாப் பிறவிப் போராளியைப் பற்றிப் புரிந்து கொள்ள ஒரு சோறு பதம் போல தான் இந்த நூலும்... அவருடைய கட்டுரைகளையும் பேச்சுகளையும் முழுதாக படிக்க வேண்டும், கேட்க வேண்டும்  என்ற ஆவலையும் தூண்டுகிறது.
💖😷🙃
இவ்வளவு போராடியும்.......

 இத்தனை காலம் கழித்தும் ..

 ஏன் .......

என்ற வினாவும்....❤❤❤...

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு