52.நுகத்தடி

🙈🙉🙊🖤🖤🖤🙈🙊
🧚‍♂️🧚‍♀️🧜‍♀️👮‍♀️👮‍♀️👩‍🎓👩‍💻👩‍💻👩‍🚀👨‍🚀
புத்தகம் ..#நுகத்தடி 
ஆசிரியர் ...பாண்டிய கண்ணன் .
பதிப்பகம் ..#பாரதி_புத்தகாலயம் .
பக்கங்கள்.. 247
வகை ..நாவல்
💜
#ஒரு_நிமிடம்_ஒரு_புத்தகம்_ஒரு_வீடியோ  நிகழ்வில் பங்கேற்றதற்காக பாரதி புத்தகாலயத்தாரால் பரிசளிக்கப்பட்டது.

🖤 புத்தகத்தின் முதல் அத்தியாயத்தைப் படித்து ...2   மாதங்களுக்கு பிறகு,  இப்போது தான் படித்தேன். 15 பக்கங்களை கடந்த பிறகு...எனக்குத் தோன்றியது😒😥
 இந்த சினிமாவில் #டிஸ்கிளைமர் என்று போடுவார்கள் இல்லையா? அது போல இருதயம் பலவீனமானவர்கள் இந்த புத்தகத்தை படிக்கும் முன் மனதை #திடப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல் பக்கத்தில் போட்டிருக்கலாம். 

பின்பக்கத்தில் கமலாலயன் சார் கருத்தினை பிறகே படித்தேன் ..எத்தனை கொடுமைகள் எவ்வளவு ரத்தம்????🤢

🖤
செய்தித்தாள்களில் துப்புரவுத் தொழிலாளர்களின் மரணச் செய்திகளை படித்தாலே இதயம் கலங்கும். அதற்குப்பின்னால் அவர்கள் சந்திக்கும் வலி, வேதனை, சொல்லில் அடங்காத் துயரங்கள்...🌓

🖤
கதை .. துப்புரவு தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த குமார் . மனைவி சுதா  ஆகியோரின் பார்வையில் தொடங்கும் கதை..   திரைப்படத்துறையில் ஆர்வம் உள்ள குமார் சூழ்நிலையால் பெரியப்பாவுடன் துப்புரவு பணிக்கு வருகிறார் .
🌓ஹோட்டலில் இலைகளை போடும் தொட்டியை சுத்தம் செய்வது, திரையரங்குகளில் துப்புரவு பணி, அக்காலத்தில் வீடுகளில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்வது ,பொது கழிவறை இடங்களை சுத்தம் செய்யும் காட்சிகளை மிக நுணுக்கமாக(மனதை மிகவும் பாரமாக்கும்) அந்த தொழிலாளர்களின் பார்வையில் பதிவு செய்துள்ளார்.

🖤 பெற்றோர்களின் மரணத்தால் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி துப்புரவு தொழிலுக்கு வந்த #சந்திரா(நாவலின் நாயகி??) முதல்நாளிலேயே பாலியல் சீண்டல், திருட்டுப் பட்டம் ,போலீஸ்  அடி,காவல்  நிலையம்..... என பதின்ம வயதில் ஒரு சிறுமிக்கு நடந்தேறும் கொடுமைகளை படிக்கவே மனம் நடுங்குகிறது.🌓

🌓அனுபவித்தவர்களுக்கு எப்படி இருக்கும் என்றார் என் தோழி. அதை கற்பனைகூட செய்து பார்க்க முடியாது.. அவ்வளவு கொடுமை🖤
 
 🖤காவல் நிலையத்தில் இருந்து தப்பித்து, குமாரால் சேலம் தொடர்வண்டியில் ஏற்றப்படும் சந்திரா ,ஒரு பெரியவருக்கு உதவி செய்ய சேர்வராயன் மலைத் தொடரின் ஒரு பகுதியிலுள்ள வெங்கடாபுரம் கிராமத்திற்கு செல்கிறாள். அங்கு மீண்டும் போலீஸ்.. மீண்டும் நகை திருட்டு பட்டம் ,சிறையில் இருந்து தப்பி மீண்டும் சிறை ....கிட்னி பறிப்பு எப்படித்தான் சந்திரா வாழ்வு மீண்டது என்பதை நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

🖤🖤 இடையிடையே குமார் சுதாவின் திருமணத்தால் ஏற்படும் நிகழ்வுகளே இது நாவல் என்று நினைவூட்டி கொண்டிருந்தது .அரசியல் பக்கபலம் இருந்ததால் தான் அந்த சாதி மறுப்பு திருமணம் கூட சாத்தியமாகிறது.
ஆனால் இறுதியாகத் தான்.. உண்மையில் நடந்த நிகழ்வுகளை தான் ஆசிரியர் ஆவணப்படுத்தி இருக்கிறார் என்று தெரிகிறது.🖤

🖤
குமாருக்கு அவர் நண்பன் கணேசன் எழுதிய கடித வரிகள் //மணந்தோம்..பெற்றோம்.., சேர்த்தோம் ..மடிந்தோம் என்ற சராசரி மனிதனாய் வாழ்வை கடந்து விடாதே .நம் வாழ்வின் சுவடுகள் காலந்தோறும் கவனிக்கப்பட வேண்டும்//
 இது அனைவருக்குமானது  தான் ..ஆனால் துப்புரவுத் தொழிலாளர்கள் அவர்களுடைய சுவடுகளை பதிப்பது என்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பதை ஆசிரியர் இந்நாவலின் வழியே நமக்குத் தெரிவிக்கிறார்.  

🌓
இந்த சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளை கண்முன்னே நிறுத்தும் சந்திராவின் கதை நம் மனதில் பல வினாக்களை எழுப்புகிறது.

🖤கல்வி பெறவே இத்தனை சிரமங்கள் உள்ளதா???

🖤இதற்கான ஒரு ரோபோட்டை அறிவியல் இப்போதேனும் தந்திருக்கிறதா?

🖤பள்ளிகளுக்கே சிசிடிவி வைக்கும் இந்த காலத்தில் ஏன் காவல்நிலையத்தில் வைக்க முடியாது?

🌓
விசாரணைக்கைதிகளைப் பற்றி பல வருடங்களாக திரைப்படம், ஆவணப்படம் எல்லாம் எடுத்தும் பிரச்சினையை ஏன் இன்னும் தீர்க்க முடியவில்லை???

🌓இது சந்திராவின் வினா /
/அரசன் அன்றே கொல்வான் ..தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழி வெற்று வார்த்தைகள் தானா?? அல்லது மனித மனங்களின் ரணங்களுக்கு மருந்திடுவதற்காக உருவாக்கப்பட்ட வெற்று மொழிகளா?//
🌓
துப்புரவுத் தொழிலாளர்களின் பிரச்சனைகள் இக்காலத்தில் ஆவது முழுவதும் தீர்ந்ததா?
🖤🖤🖤🖤
"#வலியார்முன்_தன்னை_நினைக்கதான்_தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.💜

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு