15.உடலாளுமன்றம்..முனைவர்.என்.மாதவன்

21/08/22

15/50

#ஆண்டுவிழா_அறிவியல்

புத்தகம்... #உடலாளுமன்றம். 
ஆசிரியர்.. 
முனைவர். என். மாதவன் பக்கங்கள்.. 104 
பதிப்பகம்.. புக்ஸ் ஃபார் சில்ட்ரன்_ பாரதி புத்தகாலயம்.
வகை.. கட்டுரை.

தினமலர் 'பட்டம்' இதழில் வெளிவந்த கட்டுரைகள்.
வளரிளம் பருவத்தினர் தானே படித்து ,அறிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட நூல் .

பாராளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர்கள் கூடி பேசுவது போல, உடலின் உறுப்புகள் அனைத்தும் தங்கள் குறைகளையும், பாதுகாக்க வேண்டிய முறைகள் குறித்தும் அவர்களது மன்றத்தில் வெளிப்படுத்துகின்றன.

அறிமுகத்திலிருந்து உடல் எடை உறுதி செய்வதன் அவசியம் வரை 30 கட்டுரைகளாக உடற்கூறு இயல் பற்றி பல அறிவியல் செய்திகளை அளித்துள்ளார் ஆசிரியர்.

வளரிளம் பருவத்தினர் மட்டுமல்லாமல் நம்மைப் போன்ற பெரியவர்களுக்கும் பல செய்திகள் கட்டுரைகளில் உள்ளன.

பார்வை அமைச்சகத்தின் பார்வையில் இருந்து..
கேட்பு அமைச்சகத்தின் கேள்விக்கணைகள்,
மூக்கின் முனகல்கள்,

 செய்திகள் வாசிப்பது செய்தி ஒலிபரப்புத் துறை, 'தொண்டை' மண்டல சகாக்கள், 
சத்தை பிரிப்போர் சங்கம், கணையத்தின் கணைகள், லப்டப் ரகசியம் , 
சிறுநீரா?பெரும்நீரா?, 
பாதை பெரிது- பயணமும் பெரிது, 
கண் துஞ்சா காவலர்கள், கொஞ்சம் ஆடுங்க,., கொஞ்சமாவது அசங்குங்க... எனத் தலைப்புகளே படிக்கத் தூண்டுகின்றன.

காலத்திற்கு ஏற்ற வகையில் மற்ற உறுப்புகள் மூளைக்கு whatsapp சேட்டில் தகவல்கள் பகிர்கின்றன .சிறப்பு! செல்லிடப்பேசியை அதிகமாக பயன்படுத்துவதால் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறோம் என்பதை அந்தந்த உறுப்புகள் கூறுவது நம் மனதில் எளிமையாகப் பதிவாகிறது. அழுத்தமாகவும் பதிவாகிறது.

"அழகான உலகைப் பார்க்க கண்களை கொடுத்தால் அதனை எவ்வாறு அழகாக்கலாம் என்று யோசிக்கிறார்கள் " என்று கண் கூறுவதும்,

"ஒரு ட்ராபிக் காவலர் போல எமது நண்பர் எபிக்லோடிஸ் (ஒரு வால்வு) சாப்பிடும்போது மூச்சுக் குழாயை மூடி ,உணவுக் குழாயைத் திறக்கிறார் ,மூச்சு வாங்கும்போது உணவுக் குழாயை மூடி, மூச்சுக் குழாயை திறக்கிறார்" என்று மூக்கும்...

"செக்போஸ்ட் டியூட்டி னா சும்மா இல்லைங்க.. இராத்திரியும் பகலும் வேண்டியதை விடவும் கூடாது, வேண்டாததை வச்சுக்கவும் கூடாது " என்று சொல்லும் சிறுநீரகம்..

"சுமார் 1,20,000கிமீ, மணிக்கு சுமார் 65 கிலோ மீட்டர் வேகத்தில்.. ஓடுறோம், ஓடுறோம், எமது வாழ்நாளான சுமார் 120 நாட்கள் ஓடுகிறோம்... நாங்க கருவிழியில் மட்டும் பயணிக்கிறது இல்லைங்க "
..என்று இரத்தமும் பேசுவது
 ஆசிரியரின் எளிய நகைச்சுவை கலந்த நடைக்கு சில எடுத்துக்காட்டுகள்.
எளிய அறிவியல் தமிழை தரும் இந்த நூலை அனைவருமே வாசிக்கலாம்.👍

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு