போலி அறிவியல் மாற்றுமருத்துவம் &மூடநம்பிக்கை..ஒரு விஞ்ஞான உரையாடல்

👩⚕️👩⚕️👩⚕️👩⚕️👩⚕️👩⚕️💜👩⚕️👩⚕️👩⚕️ 👩⚕️👩⚕️👩⚕️💜👩⚕️👩⚕️💕👩⚕️👩⚕️ 20/100 📚👩⚕️❤📚 புத்தகம். # போலி அறிவியல், மாற்றுமருத்துவம்& மூடநம்பிக்கை _ஒரு விஞ்ஞான உரையாடல்.. ஆசிரியர்.டாக்டர். சத்வா.T பக்கங்கள். 178 அமேசான் கிண்டிலில் படித்த நூல் இது. ⛑🏥🚑அலோபதி என்றும் ஆங்கில மருத்துவம் என்றும் கூறப்படும் நவீன விஞ்ஞான மருத்துவத்தைப் பற்றியும், அதன் நம்பகத்தன்மை பற்றியும் பல்வேறு ஆதாரங்களுடன், பல கோணங்களில் அலசி,நம்மை சிந்திக்க வைக்கிறார் ஆசிரியர் .🏥போலி அறிவியலை அம்பலப்படுத்துவது காலத்தின் தேவை என்ற கட்டுரையில் ஆரம்பிக்கும் ஆசிரியர் ஆதி சமூகத்தில் நோய்க்கான காரணிகள் தொற்றுநோய்களின் சுருக்கமான வரலாறு, பரவாத நோய்களின் சுருக்கமான வரலாறு விஞ்ஞானத்தின் தோற்றம் என படிப்படியாக நம்மை விஞ்ஞானத்தின் பக்கம் நகர்த்துகிறார். 🚑நவீன விஞ்ஞான மருத்துவம் இயற்கையும் இல்லை செயற்கையும் இல்லை அது பகுத்தறிவின் உச்சம் என்று நிரூபிப்பதற்காக நம் நாட்டில் நிலவும் மருத்துவ மூட நம்பிக்கைகள், இதர நாடுகளில் நிலவும் மருத்துவ மூட நம்பிக்கைகள் ,மாற்று மருத்துவமும் தீராத...