Posts

53.தங்கம்

Image
2021...💜💜💜💜💜 #புத்தகம் #தங்கம்  ஆசிரியர்.. சிந்து சீனு பதிப்பகம்.. அன்பு நிலையம்,          வேலூர் போன் 98652 24292. பக்கங்கள்..78 வகை..சிறுகதைத் தொகுப்பு. 🌻🌻🌻      11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு ஆசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு அட்டைப்படம் எளிமையான அழகு❤. 🌻🌻 சிறுவயதில் பாட்டிகளிடம் கேட்ட நீதிக்கதைகள், தன் நண்பர்களிடம் கூறிய கற்பனை கதைகள், (பெரும்பாலும் பேய் கதைகள்) ,கோயில்களில் கேட்ட புராணக் கதைகள், மேடைகளில் கேட்ட புரட்டுக் கதைகள் எனப் பல்வேறு கதைகள் உடனே பயணிப்பவர்கள் தான் நாம் அனைவரும். வாழ்வில் ஒவ்வொரு நாளும் பெறும் அனுபவங்கள் பலவிதம். வசதி படைத்தோருக்கு மகிழ்ச்சியான சம்பவங்களும், எளியோருக்கு வலிமிகுந்த சம்பவங்களும் நடக்கலாம் அவ்வளவே. 🌓 அதுபோல தன் வாழ்வில் ,நண்பர்களின் வாழ்வில் நடந்தவற்றை நம் அருகில் அமர்ந்து  சொல்வதைப் போலவே இருக்கிறது அனைத்து கதைகளும்..😊 #தங்கம்👩‍❤️‍💋‍👩 புத்தகத் தலைப்பாக உள்ள தங்கம் சிறுகதை பற்றி முதலில் கூற வேண்டும் ...திருநங்கை/ நம்பிகளை ஒரு மனிதப் பிறவியாக ,சக உயிராக மதிக்க வலிய...

52.நுகத்தடி

Image
🙈🙉🙊🖤🖤🖤🙈🙊 🧚‍♂️🧚‍♀️🧜‍♀️👮‍♀️👮‍♀️👩‍🎓👩‍💻👩‍💻👩‍🚀👨‍🚀 புத்தகம் ..#நுகத்தடி  ஆசிரியர் ...பாண்டிய கண்ணன் . பதிப்பகம் ..#பாரதி_புத்தகாலயம் . பக்கங்கள்.. 247 வகை ..நாவல் 💜 #ஒரு_நிமிடம்_ஒரு_புத்தகம்_ஒரு_வீடியோ  நிகழ்வில் பங்கேற்றதற்காக பாரதி புத்தகாலயத்தாரால் பரிசளிக்கப்பட்டது. 🖤 புத்தகத்தின் முதல் அத்தியாயத்தைப் படித்து ...2   மாதங்களுக்கு பிறகு,  இப்போது தான் படித்தேன். 15 பக்கங்களை கடந்த பிறகு...எனக்குத் தோன்றியது😒😥  இந்த சினிமாவில் #டிஸ்கிளைமர் என்று போடுவார்கள் இல்லையா? அது போல இருதயம் பலவீனமானவர்கள் இந்த புத்தகத்தை படிக்கும் முன் மனதை #திடப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல் பக்கத்தில் போட்டிருக்கலாம்.  பின்பக்கத்தில் கமலாலயன் சார் கருத்தினை பிறகே படித்தேன் ..எத்தனை கொடுமைகள் எவ்வளவு ரத்தம்????🤢 🖤 செய்தித்தாள்களில் துப்புரவுத் தொழிலாளர்களின் மரணச் செய்திகளை படித்தாலே இதயம் கலங்கும். அதற்குப்பின்னால் அவர்கள் சந்திக்கும் வலி, வேதனை, சொல்லில் அடங்காத் துயரங்கள்...🌓 🖤 கதை .. துப்புரவு தொழிலாளர் குடும்பத்தை ச...

51.நன்மைகளின் கருவூலம்.

Image
🤸‍♂️🤸‍♀️🏋‍♀️🏋‍♂️🤸🤾‍♀️🤾‍♂️🤼‍♂️🤼‍♀️🏋‍♂️⛹🏂⛷🤾‍♂️🤽🤽‍♀️ ❤ புத்தகம்.. நன்மைகளின் கருவூலம்.  ஆசிரியர்கள்.. பிரியசகி, ஜோசப் ஜெயராஜ். பதிப்பகம் ..பாரதி புத்தகாலயம். பக்கங்கள் ..160 வகை ..கட்டுரை தொகுப்பு #சிறப்பு..#கவிதை_உறவு_ 2019 சிறந்த நூல்களுக்கான விழாவில் சிறந்த குழந்தை வளர்ப்பு உளவியல் நூல் என்ற பரிசைப் பெற்றது.💐💐 💜ஆசிரியர்களைப் பற்றி.. #கல்வியில்_நாடகம் பயிலரங்கில் பிரியசகி அவர்களை முதன்முதலாக சந்தித்தேன் . பழகுவதற்கு இனியவர். #கற்றல்_குறைபாடுள்ள_ குழந்தைகளுக்கான அடுத்த பயிலரங்கில் இந்தப் புத்தகத்தைப் பற்றிய அறிமுகம் கிடைத்தது. ஆசிரியர்களும் பெற்றோர்களும் கேட்கும் கேள்விகளுக்கு சளைக்காமல் அக்கறையுடன் பொறுமையாக பதில் அளித்த விதம், உளவியல் சிந்தனைகளை நம் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் உடன் இணைந்து நடத்திய விதம் இந்த புத்தகத்தை உடனே படிக்க தூண்டியது. அதே பயிலரங்கின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மற்றொரு ஆசிரியர் ஜோசப் ஜெயராஜ் அவர்களும் உளவியலாளர், பயிற்சிப்பட்டறை நிபுணர் .எளிமையான சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கங்களை அளிக்கிறார். இருவருக்கும் எ...

50.தமிழர் தலைவர்

Image
50🌞🌞🌞🌞🌞🌞🌞50 💙💙💙💜💜💜💜💜 புத்தகம்..#தமிழர்_தலைவர் .பாகம் 1 ஆசிரியர் ..சாமி. சிதம்பரனார். பதிப்பகம் ...பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம். பக்கங்கள்.. 300 💖 ஏறக்குறைய மூன்று வருடங்களுக்கு முன்பு வாங்கிய புத்தகம். வாழ்க்கை வரலாறு என்றாலே படிப்பதற்கு அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது என்றும், பிறகு படித்துக் கொள்ளலாம் என்றும் ஒதுக்கி வைத்து விடுவேன் . #மாபெரும்_தமிழ்_கனவு  படித்ததன் விளைவாக #பேரறிஞர் இதனைப் படிக்க வைத்துவிட்டார் . இந்த நூலின் இன்னொரு சிறப்பம்சம் நூலாசிரியர் எழுதியவற்றை, பெரியாரே படித்துப்பார்த்து திருத்தம் செய்து இருக்கிறார் .(முதல் பதிப்பு 1939). தமிழர் தலைவர்,  பெற்றோர் பெருமை எனத் தொடங்கிப் பெரியார்  வரை பதினெட்டு கட்டுரைகளில் அவருடைய முடிவுறாத வாழ்க்கை பயணத்தை விவரித்திருக்கிறார் ஆசிரியர். ❤ //சதாசர்வ காலமும் எங்கள் வீட்டில் இருசமய பக்தர்களாலும், பண்டிதர்களாலும்  காலட்சேபம் செய்யப்பட்டு வந்தது.// இது பெரியார் அவர்களே தம் குடும்பத்தைப் பற்றிக்   குறிப்பிட்டவை. #அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே... அதனால்தான்...

49.தாயுமானவள்

Image
👰👰👰🌍🌎🌏👰👰👰 💜💙💜💙💜💙 புத்தகம். .#தாயுமானவள்  ஆசிரியர் .#நாகூர்ரூமி  வகை ...நாவல் பக்கங்கள் ..112  பதிப்பகம் .LKM பப்ளிகேஷன், தி.நகர். வேலூர் நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் வாங்கியது. 💖கதையைப் பற்றி.. தாயை இழந்து பாட்டியால் வளர்க்கப்பட்ட மகனின் கதை.. இல்லை அந்த மகனை சிரமங்களுக்கு இடையில் வளர்த்த பாட்டியின் கதை என்பதே சரி❤  நாவலாசிரியர் தன் பாட்டியோடு பெற்றுக்கொண்ட மறக்கமுடியாத அனுபவங்களையே கதையாக எழுதியுள்ளார். இஸ்லாமிய  குடும்பங்களின் வாழ்வியலை கண் முன் நிறுத்துகிறார்.  🏃‍♂️🤺🕺🧘‍♂️ திண்ணை தாண்டுதல், பொன்வண்டு,கோலி விளையாடுதல்,நெல்  பத்தாயம், பேருந்தில் அரை டிக்கெட் எடுக்க... என்பது போன்ற பழைய கால நினைவுகளை மீட்டு எடுக்கிறது. ❤ தாய் இறந்தது புரியாத வயதில் //ம்மி தூங்குது// என்று கூறுவது ,வவ்வா மீன் விலை பேசுவது, மௌலது ஓதும் நிகழ்ச்சி, நில வழக்கு என சோகம் ,நகைச்சுவை, வலி என அனைத்து உணர்ச்சிக் குவியல்களோடு கதை நகர்கிறது. ❤ பாட்டியின் நிர்வாகத்தை Repaying capacity, resources என ஒப்பிட்டு எழுதி இருப்பது சிறப்பு.  பால்ய காலத்தை மீ...

48.அழகோ அழகு

Image
🌍🌎🌏🌏🌏🌏🌏💜💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙 புத்தகம் ..#அழகோ_அழகு ஆசிரியர்.. . வெ.இறையன்பு வகை ..சிறுகதை தொகுப்பு பக்கங்கள் ..116 #பேசும்_புத்தகம் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகத் தேர்ந்தெடுத்த புத்தகம். (இதில் நேர்மை என்னும் சிறுகதையைத் தான் தேர்ந்தெடுத்தேன்.) 14 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.  ஒவ்வொரு கதையிலும் ஒரு நீதி.#அழகோ_அழகு சிறுகதையில்  " புற அழகை விட அறிவு தரும் அழகு நிரந்தரம் "என்பது போல ஒவ்வொரு கதையும் ஒரு படிப்பினையைத் தருவதாக அமைந்துள்ளது.  ❤ கதைகளின் சுருக்கத்தை விட ஒவ்வொரு கதையிலும் என்னைக் கவர்ந்த சில வரிகளை இங்கு பதிவிட விரும்புகிறேன்.. ❤ #எட்டாவது_மலை_படைப்பிரிவு //சோகத்தை தகவலாக அளிப்பவனின்  துயரம்.. அனுபவிப்பவன்  துயரத்திலும் அதிகம்.// ❤ #இறந்தால்_ஆயிரம்  //மூல நிர்வாகத்திலிருந்து ஒதுக்கப்படுவதில்  உள்ள மிகப் பெரிய தண்டனையே ஒதுக்கப்பட்டவர்களே உதவுவதற்காக ஒதுக்கப் படுவார்கள் என்பது தான்//🙄 ❤ #கைமுறுக்குகாரி //நிராயுதபாணியாக நின்ற போதே சமாளித்துக் கொண்டு ,எழுந்து நின்று போராடி ஆகிவிட்டது ..இப்போது இதுநாள்வரை சேகரித்த அனுபவமும...

47.விடியலை நோக்கி

Image
💙💜💙💜🌳🌳🌳🌳🌳🌞🌞🌞🌞☀️ புத்தகம்... #விடியலைநோக்கி  ஆசிரியர் ..சிந்து சீனு  பக்கங்கள் _ 84  பதிப்பகம் ..அன்பு நிலையம் ,வேலூர்  வகை.. சிறுகதை தொகுப்பு. சாரல் புத்தக மையம் நந்தகுமார் அவர்கள் அனுப்பிய புத்தகம். அம்மாவின் பிறந்தநாள் என்ற கவிதைத் தொகுப்போடு இச்சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார் . ஆசிரியரின் முதல் சிறுகதைத் தொகுப்பு. இதில் 9 சிறுகதைகள் உள்ளன. தூத்துக்குடி வ .உ. சிதம்பரம் கல்லூரி தமிழ் பேராசிரியர்.. முதுமுனைவர். ஐயப்பன் அவர்கள் வாழ்த்துரை வழங்கியிருக்கிறார். ❤#புதைந்த_மனிதர்கள்  முதல் சிறுகதை கேரளாவில் டீ எஸ்டேட்டிற்கு  வேலைக்குச் சென்று நிலச்சரிவில் மறைந்த மனிதர்களின் கதையைப் பேசுகிறது. 🎈#அப்பாவின்_வழியில் மகனும் மரத்திற்காகவும், மண்ணிற்காகவும் கொடியேந்தும் கதை. ❤#கிரிவலம் தங்கையின் குடும்பத்தோடு கிரிவலம் சென்று அல்லல்பட்டு திரும்பும் குடும்பத் தலைவனின் கதை. கடைசியில் அப்பாவின் வார்த்தைகள்// அண்டத்திற்கு அப்பாலுள்ள சுடரினை பிண்டத்துள் காண்பாயடி//  நிதர்சனம்.🙏🏻 ❤#முருகன்_முடி_திருத்தகம்.. இக்கதையும் உடன்பிறந்தோர்க...