Posts

1.வானவில்...ந.க.தீப்ஷிகா

Image
📚📚📚📚📚📚 #வாசிப்பனுபவம்_2021 புத்தகம்.. # வானவில்(சிறார் பாடல்கள்) #ஆசிரியர்..ந.க.தீப்ஷிகா பதிப்பகம் ..சாரல் மையம்,     திருச்சி.            735 89 686 95 பக்கங்கள்..30 🌈 ஏழாம் வகுப்பில் படிக்கும் சிறுமி இந்த நூலின் ஆசிரியர்.கதை சொல்லியும்,பாடல்களைப் பாடியும் அசத்தியவர் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கிறார். குழந்தைகளின் மொழியைக்காது கொடுத்து கேட்பவர்கள் வெகுசிலரே .அவ்வாறு குழந்தைகளின் வாழ்க்கைக்குள் நுழைந்து ,அவர்களின் மொழியை கேட்டு, புரிந்து, பாடல்களாகவும், கதைகளாகவும் நமக்கு #அழ.வள்ளியப்பா தொடங்கி தற்காலம் வரை சில எழுத்தாளர்கள் நமக்கு வழங்கி  வருகின்றனர். அதிலும் குழந்தைகளுக்கான இலக்கியங்களை குழந்தைகளே இயற்றுவது என்பது ஒரு தனி சிறப்பு தான். அவர்களின் உலகை அவர்களே அவர்கள் மொழியில் விவரிப்பது...❤ குழந்தைத்தன மிக்க தீப்ஷிகாவின் பாடல் வரிகளில் நல்ல முதிர்ச்சியும் இருக்கிறது. அன்னை பாடல் ,தன்னம்பிக்கையைக் சுட்டிக்காட்டும் தஞ்சாவூரு பொம்மை பாடல், சுறுசுறுப்பை ஊட்டும் தேனி பாடல் பாரதியார் பற்றிய பாடல்கள் என அனைத்து பாடல்க...

2.மக்கு...By அருண்மனோகர்

Image
வாசிப்பனுபவம் #2021 📚📚📚📚📚📚 #புத்தகம்.. மக்கு ஆசிரியர்.. அருண் மனோகர். பக்கங்கள்..31 Amazon Kindle ல் (#pentopublish2021 ) வெளியிடப்பட்ட நூல்.    ஒரு கதையைப் படிக்கும் போது அது புனைவோ,உண்மையான கதையோ ஏதோ ஒரு புள்ளியில் நம்மை அந்த கதை இணைத்துக் கொள்ளும்.நம்மால் மறக்க இயலாத வரிசைகளில் ஒன்றாக இணைந்து விடும்.அதுபோல ஐந்தாம் வகுப்பில் இருந்தே கணிணி மேல் ஆர்வமிக்கவர், ஆசிரியர் பயிற்சியில் விருப்பமில்லாமல் இணைந்த நிகழ்வே என்னை இக்கதையின் உள்ளே  இழுத்துச் சென்றது.  விரும்பியது கிடைக்காவிட்டாலும் கிடைத்ததை விரும்பிச் செய்தால் சாதிக்க முடியும் என்று வெளிச்சமிட்டுக் காட்டும் நூல்.  பள்ளி மாணவரோ, கல்லூரியில் படிப்பவரோ,தடம் மாறி இருந்தாலும் ,சகவாசத்தில் தடுமாறி  இருந்தாலும் இந்தக் கதையைப் படித்த பிறகு, குறிக்கோளை நோக்கி ஓர் எட்டு வைக்க முயற்சிப்பார்கள் என்பது திண்ணம். NOTORIOUS என்ற ஒரு சொல் ஏற்படுத்திய பாதிப்பே வளர்ச்சிப் பாதைக்குத் திருப்புகிறது.ஆனாலும்..தீயினால் சுட்ட புண் உள்ளாறும்...என்ற திருக்குறள் தான் நினைவுக்கு வருகின்றது. ச.மாடசாமி ஐயா அவர்களின்...

53.தங்கம்

Image
2021...💜💜💜💜💜 #புத்தகம் #தங்கம்  ஆசிரியர்.. சிந்து சீனு பதிப்பகம்.. அன்பு நிலையம்,          வேலூர் போன் 98652 24292. பக்கங்கள்..78 வகை..சிறுகதைத் தொகுப்பு. 🌻🌻🌻      11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு ஆசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு அட்டைப்படம் எளிமையான அழகு❤. 🌻🌻 சிறுவயதில் பாட்டிகளிடம் கேட்ட நீதிக்கதைகள், தன் நண்பர்களிடம் கூறிய கற்பனை கதைகள், (பெரும்பாலும் பேய் கதைகள்) ,கோயில்களில் கேட்ட புராணக் கதைகள், மேடைகளில் கேட்ட புரட்டுக் கதைகள் எனப் பல்வேறு கதைகள் உடனே பயணிப்பவர்கள் தான் நாம் அனைவரும். வாழ்வில் ஒவ்வொரு நாளும் பெறும் அனுபவங்கள் பலவிதம். வசதி படைத்தோருக்கு மகிழ்ச்சியான சம்பவங்களும், எளியோருக்கு வலிமிகுந்த சம்பவங்களும் நடக்கலாம் அவ்வளவே. 🌓 அதுபோல தன் வாழ்வில் ,நண்பர்களின் வாழ்வில் நடந்தவற்றை நம் அருகில் அமர்ந்து  சொல்வதைப் போலவே இருக்கிறது அனைத்து கதைகளும்..😊 #தங்கம்👩‍❤️‍💋‍👩 புத்தகத் தலைப்பாக உள்ள தங்கம் சிறுகதை பற்றி முதலில் கூற வேண்டும் ...திருநங்கை/ நம்பிகளை ஒரு மனிதப் பிறவியாக ,சக உயிராக மதிக்க வலிய...

52.நுகத்தடி

Image
🙈🙉🙊🖤🖤🖤🙈🙊 🧚‍♂️🧚‍♀️🧜‍♀️👮‍♀️👮‍♀️👩‍🎓👩‍💻👩‍💻👩‍🚀👨‍🚀 புத்தகம் ..#நுகத்தடி  ஆசிரியர் ...பாண்டிய கண்ணன் . பதிப்பகம் ..#பாரதி_புத்தகாலயம் . பக்கங்கள்.. 247 வகை ..நாவல் 💜 #ஒரு_நிமிடம்_ஒரு_புத்தகம்_ஒரு_வீடியோ  நிகழ்வில் பங்கேற்றதற்காக பாரதி புத்தகாலயத்தாரால் பரிசளிக்கப்பட்டது. 🖤 புத்தகத்தின் முதல் அத்தியாயத்தைப் படித்து ...2   மாதங்களுக்கு பிறகு,  இப்போது தான் படித்தேன். 15 பக்கங்களை கடந்த பிறகு...எனக்குத் தோன்றியது😒😥  இந்த சினிமாவில் #டிஸ்கிளைமர் என்று போடுவார்கள் இல்லையா? அது போல இருதயம் பலவீனமானவர்கள் இந்த புத்தகத்தை படிக்கும் முன் மனதை #திடப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல் பக்கத்தில் போட்டிருக்கலாம்.  பின்பக்கத்தில் கமலாலயன் சார் கருத்தினை பிறகே படித்தேன் ..எத்தனை கொடுமைகள் எவ்வளவு ரத்தம்????🤢 🖤 செய்தித்தாள்களில் துப்புரவுத் தொழிலாளர்களின் மரணச் செய்திகளை படித்தாலே இதயம் கலங்கும். அதற்குப்பின்னால் அவர்கள் சந்திக்கும் வலி, வேதனை, சொல்லில் அடங்காத் துயரங்கள்...🌓 🖤 கதை .. துப்புரவு தொழிலாளர் குடும்பத்தை ச...

51.நன்மைகளின் கருவூலம்.

Image
🤸‍♂️🤸‍♀️🏋‍♀️🏋‍♂️🤸🤾‍♀️🤾‍♂️🤼‍♂️🤼‍♀️🏋‍♂️⛹🏂⛷🤾‍♂️🤽🤽‍♀️ ❤ புத்தகம்.. நன்மைகளின் கருவூலம்.  ஆசிரியர்கள்.. பிரியசகி, ஜோசப் ஜெயராஜ். பதிப்பகம் ..பாரதி புத்தகாலயம். பக்கங்கள் ..160 வகை ..கட்டுரை தொகுப்பு #சிறப்பு..#கவிதை_உறவு_ 2019 சிறந்த நூல்களுக்கான விழாவில் சிறந்த குழந்தை வளர்ப்பு உளவியல் நூல் என்ற பரிசைப் பெற்றது.💐💐 💜ஆசிரியர்களைப் பற்றி.. #கல்வியில்_நாடகம் பயிலரங்கில் பிரியசகி அவர்களை முதன்முதலாக சந்தித்தேன் . பழகுவதற்கு இனியவர். #கற்றல்_குறைபாடுள்ள_ குழந்தைகளுக்கான அடுத்த பயிலரங்கில் இந்தப் புத்தகத்தைப் பற்றிய அறிமுகம் கிடைத்தது. ஆசிரியர்களும் பெற்றோர்களும் கேட்கும் கேள்விகளுக்கு சளைக்காமல் அக்கறையுடன் பொறுமையாக பதில் அளித்த விதம், உளவியல் சிந்தனைகளை நம் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் உடன் இணைந்து நடத்திய விதம் இந்த புத்தகத்தை உடனே படிக்க தூண்டியது. அதே பயிலரங்கின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மற்றொரு ஆசிரியர் ஜோசப் ஜெயராஜ் அவர்களும் உளவியலாளர், பயிற்சிப்பட்டறை நிபுணர் .எளிமையான சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கங்களை அளிக்கிறார். இருவருக்கும் எ...

50.தமிழர் தலைவர்

Image
50🌞🌞🌞🌞🌞🌞🌞50 💙💙💙💜💜💜💜💜 புத்தகம்..#தமிழர்_தலைவர் .பாகம் 1 ஆசிரியர் ..சாமி. சிதம்பரனார். பதிப்பகம் ...பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம். பக்கங்கள்.. 300 💖 ஏறக்குறைய மூன்று வருடங்களுக்கு முன்பு வாங்கிய புத்தகம். வாழ்க்கை வரலாறு என்றாலே படிப்பதற்கு அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது என்றும், பிறகு படித்துக் கொள்ளலாம் என்றும் ஒதுக்கி வைத்து விடுவேன் . #மாபெரும்_தமிழ்_கனவு  படித்ததன் விளைவாக #பேரறிஞர் இதனைப் படிக்க வைத்துவிட்டார் . இந்த நூலின் இன்னொரு சிறப்பம்சம் நூலாசிரியர் எழுதியவற்றை, பெரியாரே படித்துப்பார்த்து திருத்தம் செய்து இருக்கிறார் .(முதல் பதிப்பு 1939). தமிழர் தலைவர்,  பெற்றோர் பெருமை எனத் தொடங்கிப் பெரியார்  வரை பதினெட்டு கட்டுரைகளில் அவருடைய முடிவுறாத வாழ்க்கை பயணத்தை விவரித்திருக்கிறார் ஆசிரியர். ❤ //சதாசர்வ காலமும் எங்கள் வீட்டில் இருசமய பக்தர்களாலும், பண்டிதர்களாலும்  காலட்சேபம் செய்யப்பட்டு வந்தது.// இது பெரியார் அவர்களே தம் குடும்பத்தைப் பற்றிக்   குறிப்பிட்டவை. #அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே... அதனால்தான்...

49.தாயுமானவள்

Image
👰👰👰🌍🌎🌏👰👰👰 💜💙💜💙💜💙 புத்தகம். .#தாயுமானவள்  ஆசிரியர் .#நாகூர்ரூமி  வகை ...நாவல் பக்கங்கள் ..112  பதிப்பகம் .LKM பப்ளிகேஷன், தி.நகர். வேலூர் நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் வாங்கியது. 💖கதையைப் பற்றி.. தாயை இழந்து பாட்டியால் வளர்க்கப்பட்ட மகனின் கதை.. இல்லை அந்த மகனை சிரமங்களுக்கு இடையில் வளர்த்த பாட்டியின் கதை என்பதே சரி❤  நாவலாசிரியர் தன் பாட்டியோடு பெற்றுக்கொண்ட மறக்கமுடியாத அனுபவங்களையே கதையாக எழுதியுள்ளார். இஸ்லாமிய  குடும்பங்களின் வாழ்வியலை கண் முன் நிறுத்துகிறார்.  🏃‍♂️🤺🕺🧘‍♂️ திண்ணை தாண்டுதல், பொன்வண்டு,கோலி விளையாடுதல்,நெல்  பத்தாயம், பேருந்தில் அரை டிக்கெட் எடுக்க... என்பது போன்ற பழைய கால நினைவுகளை மீட்டு எடுக்கிறது. ❤ தாய் இறந்தது புரியாத வயதில் //ம்மி தூங்குது// என்று கூறுவது ,வவ்வா மீன் விலை பேசுவது, மௌலது ஓதும் நிகழ்ச்சி, நில வழக்கு என சோகம் ,நகைச்சுவை, வலி என அனைத்து உணர்ச்சிக் குவியல்களோடு கதை நகர்கிறது. ❤ பாட்டியின் நிர்வாகத்தை Repaying capacity, resources என ஒப்பிட்டு எழுதி இருப்பது சிறப்பு.  பால்ய காலத்தை மீ...