Posts

15.உடலாளுமன்றம்..முனைவர்.என்.மாதவன்

Image
21/08/22 15/50 #ஆண்டுவிழா_அறிவியல் புத்தகம்... #உடலாளுமன்றம்.  ஆசிரியர்..  முனைவர். என். மாதவன் பக்கங்கள்.. 104  பதிப்பகம்.. புக்ஸ் ஃபார் சில்ட்ரன்_ பாரதி புத்தகாலயம். வகை.. கட்டுரை. தினமலர் 'பட்டம்' இதழில் வெளிவந்த கட்டுரைகள். வளரிளம் பருவத்தினர் தானே படித்து ,அறிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட நூல் . பாராளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர்கள் கூடி பேசுவது போல, உடலின் உறுப்புகள் அனைத்தும் தங்கள் குறைகளையும், பாதுகாக்க வேண்டிய முறைகள் குறித்தும் அவர்களது மன்றத்தில் வெளிப்படுத்துகின்றன. அறிமுகத்திலிருந்து உடல் எடை உறுதி செய்வதன் அவசியம் வரை 30 கட்டுரைகளாக உடற்கூறு இயல் பற்றி பல அறிவியல் செய்திகளை அளித்துள்ளார் ஆசிரியர். வளரிளம் பருவத்தினர் மட்டுமல்லாமல் நம்மைப் போன்ற பெரியவர்களுக்கும் பல செய்திகள் கட்டுரைகளில் உள்ளன. பார்வை அமைச்சகத்தின் பார்வையில் இருந்து.. கேட்பு அமைச்சகத்தின் கேள்விக்கணைகள், மூக்கின் முனகல்கள்,  செய்திகள் வாசிப்பது செய்தி ஒலிபரப்புத் துறை, 'தொண்டை' மண்டல சகாக்கள்,  சத்தை பிரிப்போர் சங்கம், கணையத்தின் கணைகள், லப்டப் ரகசியம் ,  சிறு

14.புத்து மண்.. சுப்ரபாரதிமணியன்

Image
20.08.22 14/50 #ஆண்டுவிழா_இயற்கை. புத்தகம்... புத்து மண் (சுற்றுச்சூழல் நாவல்) ஆசிரியர்.. சுப்ரபாரதி மணியன். பதிப்பகம்..நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.. பக்கங்கள்..133 வகை..நாவல். நூலைப் பற்றி..    சமூகத்தின் பால் அக்கறை கொண்ட, ஏதேனும் சிறு மாற்றமாவது நிகழாதா எனத் தன் முதுமையிலும்  போராடும் மணியன் என்ற போராளியைச் சுற்றி நிகழும் கதை. திருப்பூர் தான் கதைக்களம் என்றவுடன் சாயக்கழிவுகளினால் ஏற்படும் மோசமான நிலைகள் நம் கண் முன்னே வந்துவிடும். எத்தனையோ திரைப்படங்கள் கூட இதைப் பற்றி பேசிஇருந்தாலும் தீர்வு ஒரு கேள்விக்குறியே. வளர்ச்சி என்ற பெயரில் அடித்தளத்தை இழந்து நம் உலகம்  ஆட்டம் கண்டுள்ளது.   மணியன் என்பவரின் மனைவி சிவரஞ்சனி,மகள் தேனம்மை, ஆய்வு மாணவி ஜூலியா என்பவர்களின் பார்வையில் மணியனைப் பற்றியும், அவரின் போராட்டங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது.  ஸ்பின்னிங் மில்களில் சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளைத் தருகிறது.ஆனால் இந்தத் திட்டத்தில் பெண்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது, பயிற்சி என்ற பெயரில் மூன்று மாதங்கள் சம்பளமில்லாமல் வேலை பார்ப்பது,இயந்திரத்த

13.ராசாத்தி ... சிந்து சீனு

Image
12/07/22 13/50 புத்தகம்... #ராசாத்தி  ஆசிரியர்... சிந்து சீனு. வகை ...நாவல் . பதிப்பகம்.. லாவண்யா புத்தகாலயம், வேலூர். 97905 66619. பக்கங்கள்..104  ஆசிரியரைப்பற்றி...  கவிதை, சிறுகதை, நாவல் எனப் பல்வேறு தளங்களிலும் பயணிப்பவர். இவருடைய யார் அவன் ?சாத்கர் அரிசிக்கா போன்ற நாவல்கள் எளிய மனிதனின் வாழ்வியலையும், சுற்றுச்சூழலைப் பற்றியும் பேசுவன. நூலைப் பற்றி... தொழிலாளர் வர்க்கத்தின் உழைப்பினை சுரண்டி முதலாளி வர்க்கம் வாழ்வதைப் போல குடும்பத்திலும் சிலர் மற்றவர்களின் உழைப்பைச் சுரண்டி வாழ்கிறவர்கள் உண்டு என்பதை வெளிச்சமிட்டு காட்டுகிறது இந்தப் புதினம்.  மூன்று தலைமுறை வாழ்க்கையை ராசாத்தியை மையமாக வைத்து, எளிய மனிதர்களின் வாழ்வியலை சித்தரித்துக் காட்டுகின்றது.  பஞ்சமி நிலத்தைப் போராடிப்பெற்ற முருகேசன்- சாந்தா தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள் மூத்தவன் சிவனாண்டி .சிறிய வயதிலேயே பொறுப்புணர்ந்து நடந்து கொள்பவன். ஒரே வயிற்றில் பிறந்திருந்தாலும்  தான் தோன்றித்தனமாக இருக்கும் தம்பிகள் சுதர்சனம் மற்றும் பிரகாசம். வயல்வெளிகளில் கூலி வேலை செய்தும் ஆடு மாடுகளை மேய்த்தும் பிழைக்கும் எளிய மனிதர

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு

Image
#Reading marathon_2021 Book 12 புத்தகம்📙📘📗📓 ..#வானிலிருந்து_வந்தவர்கள் . ஆசிரியர்.. சிந்து சீனு வகை ..சிறுகதை தொகுப்பு  பதிப்பகம் ..அன்பு நிலையம், வேலூர். அலைபேசி 98 65 22 42 92. ஆசிரியரின் மூன்றாவது சிறுகதை தொகுப்பு ஒன்பது சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அத்தனை சிறுகதைகளும் நம்முடைய சூழலில் நடைபெறும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதோடு ஒரு படிப்பினையைத் தருவதாகவும் 👍 #நாடி_ஜோதிடம் நடுத்தர மக்கள் தங்கள் வாழ்வு எப்படியாவது மேன்மை அடைந்து விடாதா என்று விழும் இடங்களில் ஒன்று ஜோதிடம். ஓலைச்சுவடிகளில் தங்கள் எதிர்காலத்தைத் தேடுபவர்களில் அநேகர் பட்டம் வாங்கியோர். ஒரு பவுன் தங்கத்தகட்டிற்காக ஒரு பெண்மணி படும் துயரத்தைக் கூறி நாம் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்படுகின்றோம் என்று காட்டி இருக்கிறார். #விவசாயி பருவகாலங்கள் பொய்த்துப்போன இந்த காலத்தில் சிறு விவசாயிகளின் வேதனை சொல்லி மாளாது தான் .இரண்டு தங்கைகளையும் 5 மகள்களையும் பெற்ற விவசாயி ,அவரின்நிலை இறுதியாக வெள்ள நிவாரண நிதிக்கு காத்திருப்பதை வலியுடன் விவரித்திருக்கிறார். வேளாண் சட்டத்தை எதிர்த்து நடக்கும் போராட்டத்தைப் பற்

10. குழந்தைகளின் நூறு மொழிகள்-ச.மாடசாமி ஐயா

Image
📚📚📚📚📚📚📚2021 புத்தகம் ..#குழந்தைகளின்_நூறு_மொழிகள். ஆசிரியர் ..ச. மாடசாமி        பதிப்பகம் ..பாரதி புத்தகாலயம் வகை.. கட்டுரைத் தொகுப்பு. பக்கங்கள் 96 நான் வாசிக்கும் ஆசிரியரின் மூன்றாவது நூல் .பூங்கொடி பாலமுருகன் அறிமுகப்படுத்திய உடன் வாங்கிவிட்டேன். அய்யாவின் ஒவ்வொரு நூலை வாசித்து முடித்ததும் ஒத்த அலைவரிசை உடைய நண்பர்களுடன் உரையாடிய நிறைவு மனதில்❤️ 14 கட்டுரைகள் நிரம்பிய அனுபவத் தொகுப்பு. இத்தாலியின் ரெகியோ அணுகுமுறை பற்றிய புதிய தகவல் முதல் கட்டுரையில்..  #குழந்தைகள் பேச நூறு மொழிகள்!  நூறு சிந்தனைகள்! - -  கண்டுபிடிக்க,  கனவு காண,  அவர்களுக்கு நூறு உலகங்கள்!  இது ரெக்கியோ பள்ளியின் முதல் ஆசிரியர் லோரிஸ் மாலகுஸ்ஸி அவர்களின் கவிதை. குழந்தையின் 99 உலகங்களை மறைத்துவிட்டு ஒரே ஒரு உலகை மட்டும் காட்ட விரும்புகின்றன பள்ளிகள் என்று வருத்தப்பட்டவர். பாடத்திட்டத்தையும்,35 மதிப்பெண்களையும் தாண்டி இந்த வரிகள் வகுப்பறையில் நமக்கு நினைவுக்கு வருமா? #கண்கள்_உங்களைத்தான்_கவனிக்கின்றன  என்ற இரண்டாவது கட்டுரையில்....  நம்பிக்கையுடன் எதிர்பார்ப்புடன் காணும் மாணவர்களின் கண்களை எதிர்கொள

9.காலம் தோறும் பெண்_இராஜம் கிருஷ்ணன்.

Image
2021📚📚📚📚📚 புத்தகம்.. காலம்தோறும் பெண் (சமூகவியல் ஆய்வு)  ஆசிரியர் .. ராஜம் கிருஷ்ணன். பதிப்பகம்.. சிந்தன் புக்ஸ்                              சென்னை.            Mobile  9445123164 வகை...கட்டுரை பக்கங்கள்..143 பெண் ஏன் அடிமையானாள்? எப்படி ஆனாள்? என ஆராய்கிறார் ஆசிரியர் ராஜம் கிருஷ்ணன் 25 கட்டுரைகளில்.. ஆதி நாட்களில் மனித இனக் குழந்தைகளின் தலைவியாக, தாயாக இருந்த பெண்கள் எப்போது ஒடுக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டு, அடிமையாக்கப்பட்டாள்?  'தெய்வந் தொழாள் கொழுநற்றொழுதெழுவாள்  ' என்று வள்ளுவர் கூறியுள்ளார் எனில் எந்த நூற்றாண்டில் இப்படி மாறியது? வேத காலத்தில் பெண்களுக்கு மரியாதை இருந்ததா? வேதங்களையே படிக்கக் கூடாது என்ற நிலை தானே இருந்தது? கல்வி அனைத்துப் பெண்களுக்கும் கிடைக்கிறதா? கிடைத்த வேலையை செய்ய முடிகிறதா? இவை போன்ற‌ வினாக்களை எழுப்பி ஆசிரியர் தான் பார்த்து பாதிப்படைந்த சம்பவங்களைப் பகிர்ந்து விடை காணவும்,படிப்பவர்களை சிந்திக்கவும் வைத்திருக்கிறார். முன்னேறி இருப்பது போல் ஒரு‌ தோற்றமே இன்றும்.. மாற்றம் ஒன்றே மாறாதது.காத்திருப்போம்.

ஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா? _சுப.வீ

Image
2021_8📚📚📚📚📚 புத்தகம்.. ஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா?  ஆசிரியர் .. சுப. வீரபாண்டியன் பதிப்பகம் கருஞ்சட்டை பதிப்பகம் பக்கங்கள்..40 வகை..கட்டுரை  #அறிவுத்தேடல் என்ற நிகழ்வில் இடம்பெற்றஆசிரியரின் உரையை சிறு நூலாக மாற்றியிருக்கிறார்கள்.   இயற்பியலை எளிமையாக எழுதுவதும், அறிவியல் துறை சாராதவர்களுக்கும்  புரியும் வகையில் இருப்பதும் ஹாக்கிங் எழுத்துக்களின் சிறப்பு. #Brief answers to the big question என்ற  புத்தகத்தில் இடம்பெற்ற முதல் கேள்வி தான் கடவுள் இருக்கிறாரா? என்பது. ஸ்டீபன் ஹாக்கிங்  வாழ்க்கை பற்றிய சுருக்கமான  குறிப்பும் உண்டு. கடவுள் நம்பிக்கை நிறைந்த நியூட்டன் ,அதைப்பற்றி கவலை இல்லாமல் இருந்த  ஐன்ஸ்டீன் அவர்களது கருத்துக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இயேசு பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த கிரேக்க அறிவியல் அறிஞர் அரிஸ்டார்கஸ்( ‌ Aristarchus) சூரியன் தான் மையமாக இருக்கிறது., சூரியன் பூமி நிலா ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது ஏற்படும் நிழல்களால்  தான் கிரகணங்கள் உருவாகிறது, சூரியனும் ஒரு நட்சத்திரமே போன்ற அறிவியல் உண்மைகளை கூறியுள்ளார்.