சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்..ஆர்.பாலகிருஷ்ணன் iAS

❤❤❤💙❤❤❤ 11/100 📚📚📚📚📚📚📚 புத்தகம் .சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம். ஆசிரியர். ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப(ஓய்வு) பக்கங்கள். 206 பதிப்பகம். பாரதி புத்தகாலயம். வகை..ஆய்வு நூல். கட்டுரை தொகுப்பு. .இந்நூலாசிரியரின் உரையினை சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் (தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஏற்பாடு செய்த நிகழ்வு) நேரில் கேட்கும் வாய்ப்பினைப் பெற்றேன்😍.அதுதான் இந்நூலைப் படிக்கத் தூண்டியது. இந்நூல் இரண்டு ஆய்வுகட்டுரைகளைக் கொண்டது. .மேலும் ஆய்வுக்கான தரவுகள், அணிந்துரை (சிந்துவெளி ஆய்வு அறிஞர் திரு.ஐராவதம் மகாதேவன்),மதிப்புரை1. (நா.மம்மது,உயிர்மை மாத இதழ்), 2.பிரபஞ்சன் (தமிழ் இந்து) 3.சு.கி.ஜெயகரன்(புதிய புத்தகம் பேசுவது மாத இதழ்)4. டாக்டர். சங்கர சரவணன் (ஆனந்த விகடனில்) ஆகியவை இடம்பெற்றுள்ளன.அட்டவணைகள்,வரைபடங்களே 50 பக்கங்கள் உள்ளன. நமது பாரம்பரியத்தின் தேடல் என்ற உணர்வே இந்நூலை பெருமிதத்துடன் படிக்க வைத்தது.❤ முதல் கட்டுரையில் (சிந்துவெளிப் ப...