Posts

7.சிறகுக்குள் வானம்..ஆர்.பாலகிருஷ்ணன்.

Image
📚📚📚📚📚📚 புத்தகம்.. சிறகுக்குள் வானம்  ஆசிரியர் .. ஆர் பாலகிருஷ்ணன் ..ஐஏஎஸ் பக்கங்கள்.. 159  பதிப்பகம் .. உயிர்மை.  வகை... கட்டுரை 'சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் 'என்ற ஆசிரியரின்  நூலைப் படித்தபிறகு தேர்ந்தெடுத்த புத்தகம். சிறகுக்குள் வானம்... தலைப்பே நிறைய நேரம் எடுத்துக் கொண்டது. சிறகை விரும்பாதவர் யார் ?அது ஒரு குறியீடு அல்லவா? நம்மை கீழிருந்து மேல் நோக்கி அழைத்துச் செல்வது தானே? என்று தொடர்ந்து கொண்டே இருந்தது ..ஆசிரியரும் தலைப்பை பற்றி தன் உரையில் அருமையான விளக்கம் அளித்துள்ளார். 24 கட்டுரைகளாக தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் அதை ஒட்டிய ஒரு கவிதை அருமை. 'குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் படணும் ',என்பார்களே அதுபோல ,ஆசிரியர் காமராஜர் அவர்களால் 14 வயதில் #ஐஏஎஸ் படி என்று ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறார். அதனால்தான், 1984இல் தமிழில் முதன் முறையாக தேர்வு எழுதி, தன் உழைப்பால் முதல் முயற்சியிலேயே வெற்றியும் பெற்றிருக்கிறார். //இலக்கு ஒரு தொலைநோக்குப் பார்வையை நமக்கு தருகிறது. நம்மை  உந்துகிறது செயல்பட வைக்கிறது .//எ...

16.கொஞ்சம் அறிவியல் கொஞ்சம் கதை

Image
#அறிவியல் புத்தகம் ..கொஞ்சம் அறிவியல் , கொஞ்சம் கதை. ஆசிரியர்... என் சொக்கன்  பதிப்பகம்.. மதி நிலையம்  சென்னை 86 . 044-28111506. சில வருடங்களுக்கு முன்பு வேலூரில் புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம். குமுதம், கோகுலம், முத்தாரம், சூரியக்கதிர் போன்ற புத்தகங்களில் வெளிவந்த கதை/ கட்டுரைகளின் தொகுப்பு .கட்டுரைகள் என்பதைவிட கதைகள் என்றே சொல்லலாம். அவ்வளவு சுவாரசியமாக விஞ்ஞானிகளின் வாழ்வில் நடந்த சிறுசிறு சம்பவங்களின் மூலம் அவர்களை அறிமுகப் படுத்துகிறார்  ஆசிரியர்.  பள்ளி நாட்களில் ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தை அறிமுகப்படுத்தும் போது 'யுரேகா' என்று ஓடிய சம்பவத்தை கூறாத அறிவியல் ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன் .இதே வகையில் கோப்பர்நிக்கஸ் சார்லஸ் டார்வின் , அச்சு எந்திரத்தை கண்டுபிடித்த குட்டன்பர்க், மின்காந்தப் புலத்தை வகுப்பறையில் கண்டுபிடித்த ஹன்ஸ் ஓர்ஸ்டட், 'பேக்லைட் 'என்ற பிளாஸ்டிக் தொழில்நுட்பம் கண்டுபிடித்த லியோ, பேராசிரியர் யஷ்பால், பாராசூட் கண்டுபிடித்த செபாஸ்டியன், பில்கேட்ஸ், ஜெகதீஷ் சந்திரபோஸ், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ,அணுவை முதன்முதலில் #அடோ...

15.கிடை

Image
முகநூலில்..June 15/2021 #கிராவைக்_கொண்டாடுவோம் புத்தகம் ..கிடை  வகை ..குறுநாவல்  பக்கங்கள்.. 60  பதிப்பகம் ..காலச்சுவடு கி.ராவின் எழுத்துக்களை சிறுவயதிலிருந்தே வாசித்த அனுபவம் இருந்தாலும் அவருடைய எந்த புத்தகமும் அலமாரியில் இல்லை. அதற்காகவே CBF2021ல் இந்த நாவலை வாங்கினேன்.   குறுநாவல் அளவில் சிறியதாக இருந்தாலும் பேசப்படும் விஷயங்கள் அதிகம். #செம்மறி ஆடு, வெள்ளாடு களின் வகைகளைப் பற்றி...  #கிடையில் பாங்கு பிரிப்பதைப் பற்றி...  #கீதாரியின் வேலையைப்பற்றி..  #வயதான கீதாரிகளின் கைத்திறமைகள் பற்றி...  #கிடையை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்பவர்கள் பாடு பற்றி.. #இடைக்காடர் என்னும் சித்தர் பஞ்ச காலத்தில் தன் ஆடுகளை எப்படி வளர்த்தார் என்பது பற்றி... #மக்களின் மூட நம்பிக்கைகளைப் பயன் படுத்திக் குளிர்காயும் பொன்னுசாமி நாயக்கர் போன்ற மனிதர்களைப் பற்றி (பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டிக்கொள்கிறான்) ... #ராமக்கோனார்  முதன் முதலாக திருச்செந்தூருக்கு ரயிலில் சென்று, முதன்முதலில் கடலைப்‌பார்த்த கதை மூலம் அவர்களின்  நகைச்சுவை  உணர்வு பற்றி ...

15.உடலாளுமன்றம்..முனைவர்.என்.மாதவன்

Image
21/08/22 15/50 #ஆண்டுவிழா_அறிவியல் புத்தகம்... #உடலாளுமன்றம்.  ஆசிரியர்..  முனைவர். என். மாதவன் பக்கங்கள்.. 104  பதிப்பகம்.. புக்ஸ் ஃபார் சில்ட்ரன்_ பாரதி புத்தகாலயம். வகை.. கட்டுரை. தினமலர் 'பட்டம்' இதழில் வெளிவந்த கட்டுரைகள். வளரிளம் பருவத்தினர் தானே படித்து ,அறிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட நூல் . பாராளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர்கள் கூடி பேசுவது போல, உடலின் உறுப்புகள் அனைத்தும் தங்கள் குறைகளையும், பாதுகாக்க வேண்டிய முறைகள் குறித்தும் அவர்களது மன்றத்தில் வெளிப்படுத்துகின்றன. அறிமுகத்திலிருந்து உடல் எடை உறுதி செய்வதன் அவசியம் வரை 30 கட்டுரைகளாக உடற்கூறு இயல் பற்றி பல அறிவியல் செய்திகளை அளித்துள்ளார் ஆசிரியர். வளரிளம் பருவத்தினர் மட்டுமல்லாமல் நம்மைப் போன்ற பெரியவர்களுக்கும் பல செய்திகள் கட்டுரைகளில் உள்ளன. பார்வை அமைச்சகத்தின் பார்வையில் இருந்து.. கேட்பு அமைச்சகத்தின் கேள்விக்கணைகள், மூக்கின் முனகல்கள்,  செய்திகள் வாசிப்பது செய்தி ஒலிபரப்புத் துறை, 'தொண்டை' மண்டல சகாக்கள்,  சத்தை பிரிப்போர் சங்கம், கணையத்தின் கணைகள், லப்டப் ரகசியம்...

14.புத்து மண்.. சுப்ரபாரதிமணியன்

Image
20.08.22 14/50 #ஆண்டுவிழா_இயற்கை. புத்தகம்... புத்து மண் (சுற்றுச்சூழல் நாவல்) ஆசிரியர்.. சுப்ரபாரதி மணியன். பதிப்பகம்..நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.. பக்கங்கள்..133 வகை..நாவல். நூலைப் பற்றி..    சமூகத்தின் பால் அக்கறை கொண்ட, ஏதேனும் சிறு மாற்றமாவது நிகழாதா எனத் தன் முதுமையிலும்  போராடும் மணியன் என்ற போராளியைச் சுற்றி நிகழும் கதை. திருப்பூர் தான் கதைக்களம் என்றவுடன் சாயக்கழிவுகளினால் ஏற்படும் மோசமான நிலைகள் நம் கண் முன்னே வந்துவிடும். எத்தனையோ திரைப்படங்கள் கூட இதைப் பற்றி பேசிஇருந்தாலும் தீர்வு ஒரு கேள்விக்குறியே. வளர்ச்சி என்ற பெயரில் அடித்தளத்தை இழந்து நம் உலகம்  ஆட்டம் கண்டுள்ளது.   மணியன் என்பவரின் மனைவி சிவரஞ்சனி,மகள் தேனம்மை, ஆய்வு மாணவி ஜூலியா என்பவர்களின் பார்வையில் மணியனைப் பற்றியும், அவரின் போராட்டங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது.  ஸ்பின்னிங் மில்களில் சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளைத் தருகிறது.ஆனால் இந்தத் திட்டத்தில் பெண்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது, பயிற்சி என்ற பெயரில் மூன்று மாதங்கள் சம்பளமில்லா...

13.ராசாத்தி ... சிந்து சீனு

Image
12/07/22 13/50 புத்தகம்... #ராசாத்தி  ஆசிரியர்... சிந்து சீனு. வகை ...நாவல் . பதிப்பகம்.. லாவண்யா புத்தகாலயம், வேலூர். 97905 66619. பக்கங்கள்..104  ஆசிரியரைப்பற்றி...  கவிதை, சிறுகதை, நாவல் எனப் பல்வேறு தளங்களிலும் பயணிப்பவர். இவருடைய யார் அவன் ?சாத்கர் அரிசிக்கா போன்ற நாவல்கள் எளிய மனிதனின் வாழ்வியலையும், சுற்றுச்சூழலைப் பற்றியும் பேசுவன. நூலைப் பற்றி... தொழிலாளர் வர்க்கத்தின் உழைப்பினை சுரண்டி முதலாளி வர்க்கம் வாழ்வதைப் போல குடும்பத்திலும் சிலர் மற்றவர்களின் உழைப்பைச் சுரண்டி வாழ்கிறவர்கள் உண்டு என்பதை வெளிச்சமிட்டு காட்டுகிறது இந்தப் புதினம்.  மூன்று தலைமுறை வாழ்க்கையை ராசாத்தியை மையமாக வைத்து, எளிய மனிதர்களின் வாழ்வியலை சித்தரித்துக் காட்டுகின்றது.  பஞ்சமி நிலத்தைப் போராடிப்பெற்ற முருகேசன்- சாந்தா தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள் மூத்தவன் சிவனாண்டி .சிறிய வயதிலேயே பொறுப்புணர்ந்து நடந்து கொள்பவன். ஒரே வயிற்றில் பிறந்திருந்தாலும்  தான் தோன்றித்தனமாக இருக்கும் தம்பிகள் சுதர்சனம் மற்றும் பிரகாசம். வயல்வெளிகளில் கூலி வேலை செய்தும் ஆடு மாடுகளை மேய...

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு

Image
#Reading marathon_2021 Book 12 புத்தகம்📙📘📗📓 ..#வானிலிருந்து_வந்தவர்கள் . ஆசிரியர்.. சிந்து சீனு வகை ..சிறுகதை தொகுப்பு  பதிப்பகம் ..அன்பு நிலையம், வேலூர். அலைபேசி 98 65 22 42 92. ஆசிரியரின் மூன்றாவது சிறுகதை தொகுப்பு ஒன்பது சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அத்தனை சிறுகதைகளும் நம்முடைய சூழலில் நடைபெறும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதோடு ஒரு படிப்பினையைத் தருவதாகவும் 👍 #நாடி_ஜோதிடம் நடுத்தர மக்கள் தங்கள் வாழ்வு எப்படியாவது மேன்மை அடைந்து விடாதா என்று விழும் இடங்களில் ஒன்று ஜோதிடம். ஓலைச்சுவடிகளில் தங்கள் எதிர்காலத்தைத் தேடுபவர்களில் அநேகர் பட்டம் வாங்கியோர். ஒரு பவுன் தங்கத்தகட்டிற்காக ஒரு பெண்மணி படும் துயரத்தைக் கூறி நாம் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்படுகின்றோம் என்று காட்டி இருக்கிறார். #விவசாயி பருவகாலங்கள் பொய்த்துப்போன இந்த காலத்தில் சிறு விவசாயிகளின் வேதனை சொல்லி மாளாது தான் .இரண்டு தங்கைகளையும் 5 மகள்களையும் பெற்ற விவசாயி ,அவரின்நிலை இறுதியாக வெள்ள நிவாரண நிதிக்கு காத்திருப்பதை வலியுடன் விவரித்திருக்கிறார். வேளாண் சட்டத்தை எதிர்த்து நடக்கும் போராட்டத்தைப்...

10. குழந்தைகளின் நூறு மொழிகள்-ச.மாடசாமி ஐயா

Image
📚📚📚📚📚📚📚2021 புத்தகம் ..#குழந்தைகளின்_நூறு_மொழிகள். ஆசிரியர் ..ச. மாடசாமி        பதிப்பகம் ..பாரதி புத்தகாலயம் வகை.. கட்டுரைத் தொகுப்பு. பக்கங்கள் 96 நான் வாசிக்கும் ஆசிரியரின் மூன்றாவது நூல் .பூங்கொடி பாலமுருகன் அறிமுகப்படுத்திய உடன் வாங்கிவிட்டேன். அய்யாவின் ஒவ்வொரு நூலை வாசித்து முடித்ததும் ஒத்த அலைவரிசை உடைய நண்பர்களுடன் உரையாடிய நிறைவு மனதில்❤️ 14 கட்டுரைகள் நிரம்பிய அனுபவத் தொகுப்பு. இத்தாலியின் ரெகியோ அணுகுமுறை பற்றிய புதிய தகவல் முதல் கட்டுரையில்..  #குழந்தைகள் பேச நூறு மொழிகள்!  நூறு சிந்தனைகள்! - -  கண்டுபிடிக்க,  கனவு காண,  அவர்களுக்கு நூறு உலகங்கள்!  இது ரெக்கியோ பள்ளியின் முதல் ஆசிரியர் லோரிஸ் மாலகுஸ்ஸி அவர்களின் கவிதை. குழந்தையின் 99 உலகங்களை மறைத்துவிட்டு ஒரே ஒரு உலகை மட்டும் காட்ட விரும்புகின்றன பள்ளிகள் என்று வருத்தப்பட்டவர். பாடத்திட்டத்தையும்,35 மதிப்பெண்களையும் தாண்டி இந்த வரிகள் வகுப்பறையில் நமக்கு நினைவுக்கு வருமா? #கண்கள்_உங்களைத்தான்_கவனிக்கின்றன  என்ற இரண்டாவது கட்டுரையில்....  நம்பிக்...

9.காலம் தோறும் பெண்_இராஜம் கிருஷ்ணன்.

Image
2021📚📚📚📚📚 புத்தகம்.. காலம்தோறும் பெண் (சமூகவியல் ஆய்வு)  ஆசிரியர் .. ராஜம் கிருஷ்ணன். பதிப்பகம்.. சிந்தன் புக்ஸ்                              சென்னை.            Mobile  9445123164 வகை...கட்டுரை பக்கங்கள்..143 பெண் ஏன் அடிமையானாள்? எப்படி ஆனாள்? என ஆராய்கிறார் ஆசிரியர் ராஜம் கிருஷ்ணன் 25 கட்டுரைகளில்.. ஆதி நாட்களில் மனித இனக் குழந்தைகளின் தலைவியாக, தாயாக இருந்த பெண்கள் எப்போது ஒடுக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டு, அடிமையாக்கப்பட்டாள்?  'தெய்வந் தொழாள் கொழுநற்றொழுதெழுவாள்  ' என்று வள்ளுவர் கூறியுள்ளார் எனில் எந்த நூற்றாண்டில் இப்படி மாறியது? வேத காலத்தில் பெண்களுக்கு மரியாதை இருந்ததா? வேதங்களையே படிக்கக் கூடாது என்ற நிலை தானே இருந்தது? கல்வி அனைத்துப் பெண்களுக்கும் கிடைக்கிறதா? கிடைத்த வேலையை செய்ய முடிகிறதா? இவை போன்ற‌ வினாக்களை எழுப்பி ஆசிரியர் தான் பார்த்து பாதிப்படைந்த சம்பவங்களைப் பகிர்ந்து விடை காணவும்,படிப்பவர்களை சிந்திக்கவும் வைத்திருக்கிறார்...

ஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா? _சுப.வீ

Image
2021_8📚📚📚📚📚 புத்தகம்.. ஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா?  ஆசிரியர் .. சுப. வீரபாண்டியன் பதிப்பகம் கருஞ்சட்டை பதிப்பகம் பக்கங்கள்..40 வகை..கட்டுரை  #அறிவுத்தேடல் என்ற நிகழ்வில் இடம்பெற்றஆசிரியரின் உரையை சிறு நூலாக மாற்றியிருக்கிறார்கள்.   இயற்பியலை எளிமையாக எழுதுவதும், அறிவியல் துறை சாராதவர்களுக்கும்  புரியும் வகையில் இருப்பதும் ஹாக்கிங் எழுத்துக்களின் சிறப்பு. #Brief answers to the big question என்ற  புத்தகத்தில் இடம்பெற்ற முதல் கேள்வி தான் கடவுள் இருக்கிறாரா? என்பது. ஸ்டீபன் ஹாக்கிங்  வாழ்க்கை பற்றிய சுருக்கமான  குறிப்பும் உண்டு. கடவுள் நம்பிக்கை நிறைந்த நியூட்டன் ,அதைப்பற்றி கவலை இல்லாமல் இருந்த  ஐன்ஸ்டீன் அவர்களது கருத்துக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இயேசு பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த கிரேக்க அறிவியல் அறிஞர் அரிஸ்டார்கஸ்( ‌ Aristarchus) சூரியன் தான் மையமாக இருக்கிறது., சூரியன் பூமி நிலா ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது ஏற்படும் நிழல்களால்  தான் கிரகணங்கள் உருவாகிறது, சூரியனும் ஒரு நட்சத்...

6.கல்விச்சிக்கல்கள்..(தீர்வை நோக்கி...). *உமா‌ மகேஸ்வரி*

Image
📚📚📚📚 புத்தகம்.. கல்விச் சிக்கல்கள்.. தீர்வை நோக்கி.. ஆசிரியர்  .. சு.உமா மகேஸ்வரி. பதிப்பகம்..#பன்மை_வெளி ,சென்னை.  944 391 8095 பக்கங்கள்.. 208 வகை.. கட்டுரை தொகுப்பு. ஆசிரியரைப் பற்றி... முகநூலில் அறிமுகம் ஆனவர். சென்னையில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிபவர் .பன்முகத் திறமை கொண்டவர் . மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பவர்  என்பது சிறப்புத் தகுதி. புத்தகத்தைப் பற்றி.. இந்து காமதேனு இதழில் கட்டுரைகளாக வெளிவந்தவை. சமகாலத்தில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கிறது. சிக்கல்களைப் பற்றி மட்டும் பேசாமல் தீர்வை நோக்கி நம்மை நகர வைப்பதே இந்த நூலின் வெற்றி. 31 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு.  இணையவழிக் கல்வி பற்றிய முதல் கட்டுரையில் ஆன்லைன் கல்வியினால் ஏற்பட்ட விபரீதங்களைச் சுட்டிக் காட்டி,ஒக்லஹாமா பல்கலைக்கழக உளவியல் வல்லுனர் டக்வாலன்டினா அவர்களின் மூன்று முடிவுகளையும் குறிப்பிட்டுள்ளார் . அதில் முக்கியமானது  தற்போதைய கற்கும் சூழலில்.. கற்றல் எதிர்ப்பு மனநிலைக்கு குழந்தைகள் தள்ளப்படுவது (Anti Education).. கொரானா காலம் தொடர்ந்தால் ஏற்படும் இடைநிற்ற...

5. வற்றிய மார்புகள்_தமிழ்க்காதலி தாரணி.

Image
5. புத்தகம் .. வற்றிய_மார்புகள் ஆசிரியர் - தமிழ்க் காதலி தாரணி பக்கங்கள்.. 96 அமேசான் கிண்டிலில் படித்தது. முக நூலில் அறிமுகம். தொழிற்சாலைகளால் வறண்டு போன நம் பூமித்தாயினைக் குறிப்பிடுகிறது தலைப்பு. இயற்கையை பாதுகாக்க இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு இந்த நாவல் படைக்கப்பட்டிருக்கிறது. இடையில் பெண்களின் அக உணர்வுகளையும் எதார்த்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார். நேசிக்கும் மனிதரை மாற்றுவதோ,மதம் மாறுவதோ தூய அன்பிற்கான தேடல் தான். சரி தவறு என்று சொல்ல படைத்த வராலேயே முடியுமோ? சாந்தி மீது வைத்த பானுவின் அன்பு பிரமிக்க வைக்கிறது. காப்பர் தொழிற்சாலையினால் நீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தில் தொடங்கும் கதை. அஞ்சலை என்ற ஜெசியைச் சுற்றி பின்னப்பட்டுள்ளது. அஞ்சலையின் இரு மகள்கள் பானு மற்றும் மைதிலி, மகன் உத்ரா. வெளிநாட்டில் வேலை செய்யும் கணவர் மூர்த்தி.. எல்லா மதத்திலும் ரிச்சர்டு போன்றோர் இருப்பார்கள் தங்கள் வசதிக்காக ஏமாற்றுவார்கள் என்பதை புரிந்து கொள்ளும் தெளிவு இருந்தால் அஞ்சலை ஏன் ஜெஸ்ஸியாக மாறப் போகிறாள்? விதிவிலக்கான வாழ்க்கை அவளுடையது...

4.ஹோமர்(பாலகுமார் விஜயராமன்)

Image
📚📚📚📚📚📚📚📚📚📚 4/50 புத்தகம் ..#ஹோமர்  ஆசிரியர் -பாலகுமார் விஜயராமன். பக்கங்கள்.. 162 வகை.. நாவல் அமேசான் கிண்டிலில் படித்தது. ஓர் அரசியல்வாதியின் கொலையோடு ஆரம்பிக்கும் கதைக்களம் ,புறா பந்தயக் களத்தில் பயணித்து ,நாய் வளர்ப்பு களத்திற்காக கொடைக்கானலுக்கு செல்லும் போது, காதல் களத்தையும் சற்று எட்டி பார்த்து, மீண்டும் நம்மை அரசியல் களத்திற்கு கொண்டு வந்து முடிக்கிறது.  🪶🪶 புறா வளர்ப்பு பற்றி நிறைய தகவல்கள் ஹோமர் புறா இனத்தின் தன்மை வியக்கவைக்கிறது. குறைந்த வருமானத்தை உடைய குருபால் படும் சிரமங்கள் ,இறுதியில் அவர் எடுக்கும் முடிவு என பரபர திருப்பங்கள். புறா ,நாய் என ஒவ்வொரு விலங்கினமாக யோசித்துப் பார்த்தால் கடைசியில் மனித இனம் ஒன்றுதான் அதிகமாக நன்றி மறக்கும் போல.. பந்தய வெறிபிடித்த இன்னாசி செய்யும் செயல்களை கதை என்பதை மறந்து மனதைப் பதற வைக்கிறது. புறாக்கள் வளர்க்கப்பட்ட கூடுகளைத் தேடி ,பல இடையூறுகளை தாண்டி, வருவது பெண்களின் மன நிலையையும் அகதிகளின் மனநிலையையும் நினைவூட்டுகிறது. என்னதான் வலுவான காரணம் இருந்தாலும் சட்டப்படி தவறான காரியம் செய்தால் நம் த...

3.கொல்லனின் ஆறு பெண்மக்கள் ..2021

Image
3/50+📚📚📚📚📚📚📚  புத்தகம்...#கொல்லனின்_ஆறு_பெண்மக்கள்.  ஆசிரியர்..#கோணங்கி  பதிப்பகம் ..பாரதி புத்தகாலயம்.  வகை ..சிறுகதை தொகுப்பு  பக்கங்கள்..195 பாரதி புத்தகாலயம் 50 சதவீதம் தள்ளுபடியில் புத்தகங்களை வழங்கியபோது வாங்கியது. கோணங்கியின் எழுத்துக்களை எங்கே படித்தேன் என்பதே நினைவில் இல்லை. ஆனால் புத்தகத்தை பார்த்ததும் நமக்கு பிடிக்கும் என்று தோன்றவே வாங்கினேன் .ஏமாற்றம் தரவில்லை. அம்மாவின் குடையுடன் வந்த சிரங்கு வத்தி என்ற தலைப்பில் படிக்க ஆரம்பித்தவுடன் முதல் சிறுகதையா? இல்லையே என் தம்பி கோணங்கி என்று முதல் பத்தியில் படித்தோமே என்று  யோசித்துக் கொண்டே தான் படித்தேன் .அது எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அவர்களின் அணிந்துரை என்று இறுதியாகத் தான் தெரிந்தது."அந்த வயதிலேயே அவனுக்கு மறுக்கத் தெரிந்தது" போன்ற வரிகள் எத்தனையோ கதைகளை உள்ளடக்கி இருந்தது .பால்யகால நினைவுகள் அவ்வளவு இதம். கோப்பம்மாள், கொல்லனின் ஆறு பெண்மக்கள் ,ஈஸ்வரி அக்காளின் பாட்டு, தாத்தாவின் பேனா, அப்பாவின் குகையில் இருக்கிறேன் என 22 சிறுகதைகளும் ஏதோ ஒரு நிகழ்வில்,ஒரு சொல்லில் ந...

1.வானவில்...ந.க.தீப்ஷிகா

Image
📚📚📚📚📚📚 #வாசிப்பனுபவம்_2021 புத்தகம்.. # வானவில்(சிறார் பாடல்கள்) #ஆசிரியர்..ந.க.தீப்ஷிகா பதிப்பகம் ..சாரல் மையம்,     திருச்சி.            735 89 686 95 பக்கங்கள்..30 🌈 ஏழாம் வகுப்பில் படிக்கும் சிறுமி இந்த நூலின் ஆசிரியர்.கதை சொல்லியும்,பாடல்களைப் பாடியும் அசத்தியவர் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கிறார். குழந்தைகளின் மொழியைக்காது கொடுத்து கேட்பவர்கள் வெகுசிலரே .அவ்வாறு குழந்தைகளின் வாழ்க்கைக்குள் நுழைந்து ,அவர்களின் மொழியை கேட்டு, புரிந்து, பாடல்களாகவும், கதைகளாகவும் நமக்கு #அழ.வள்ளியப்பா தொடங்கி தற்காலம் வரை சில எழுத்தாளர்கள் நமக்கு வழங்கி  வருகின்றனர். அதிலும் குழந்தைகளுக்கான இலக்கியங்களை குழந்தைகளே இயற்றுவது என்பது ஒரு தனி சிறப்பு தான். அவர்களின் உலகை அவர்களே அவர்கள் மொழியில் விவரிப்பது...❤ குழந்தைத்தன மிக்க தீப்ஷிகாவின் பாடல் வரிகளில் நல்ல முதிர்ச்சியும் இருக்கிறது. அன்னை பாடல் ,தன்னம்பிக்கையைக் சுட்டிக்காட்டும் தஞ்சாவூரு பொம்மை பாடல், சுறுசுறுப்பை ஊட்டும் தேனி பாடல் பாரதியார் பற்றிய பாடல்கள் என அனைத்து பாடல்க...

2.மக்கு...By அருண்மனோகர்

Image
வாசிப்பனுபவம் #2021 📚📚📚📚📚📚 #புத்தகம்.. மக்கு ஆசிரியர்.. அருண் மனோகர். பக்கங்கள்..31 Amazon Kindle ல் (#pentopublish2021 ) வெளியிடப்பட்ட நூல்.    ஒரு கதையைப் படிக்கும் போது அது புனைவோ,உண்மையான கதையோ ஏதோ ஒரு புள்ளியில் நம்மை அந்த கதை இணைத்துக் கொள்ளும்.நம்மால் மறக்க இயலாத வரிசைகளில் ஒன்றாக இணைந்து விடும்.அதுபோல ஐந்தாம் வகுப்பில் இருந்தே கணிணி மேல் ஆர்வமிக்கவர், ஆசிரியர் பயிற்சியில் விருப்பமில்லாமல் இணைந்த நிகழ்வே என்னை இக்கதையின் உள்ளே  இழுத்துச் சென்றது.  விரும்பியது கிடைக்காவிட்டாலும் கிடைத்ததை விரும்பிச் செய்தால் சாதிக்க முடியும் என்று வெளிச்சமிட்டுக் காட்டும் நூல்.  பள்ளி மாணவரோ, கல்லூரியில் படிப்பவரோ,தடம் மாறி இருந்தாலும் ,சகவாசத்தில் தடுமாறி  இருந்தாலும் இந்தக் கதையைப் படித்த பிறகு, குறிக்கோளை நோக்கி ஓர் எட்டு வைக்க முயற்சிப்பார்கள் என்பது திண்ணம். NOTORIOUS என்ற ஒரு சொல் ஏற்படுத்திய பாதிப்பே வளர்ச்சிப் பாதைக்குத் திருப்புகிறது.ஆனாலும்..தீயினால் சுட்ட புண் உள்ளாறும்...என்ற திருக்குறள் தான் நினைவுக்கு வருகின்றது. ச.மாடசாமி ஐயா அவர்களின்...

53.தங்கம்

Image
2021...💜💜💜💜💜 #புத்தகம் #தங்கம்  ஆசிரியர்.. சிந்து சீனு பதிப்பகம்.. அன்பு நிலையம்,          வேலூர் போன் 98652 24292. பக்கங்கள்..78 வகை..சிறுகதைத் தொகுப்பு. 🌻🌻🌻      11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு ஆசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு அட்டைப்படம் எளிமையான அழகு❤. 🌻🌻 சிறுவயதில் பாட்டிகளிடம் கேட்ட நீதிக்கதைகள், தன் நண்பர்களிடம் கூறிய கற்பனை கதைகள், (பெரும்பாலும் பேய் கதைகள்) ,கோயில்களில் கேட்ட புராணக் கதைகள், மேடைகளில் கேட்ட புரட்டுக் கதைகள் எனப் பல்வேறு கதைகள் உடனே பயணிப்பவர்கள் தான் நாம் அனைவரும். வாழ்வில் ஒவ்வொரு நாளும் பெறும் அனுபவங்கள் பலவிதம். வசதி படைத்தோருக்கு மகிழ்ச்சியான சம்பவங்களும், எளியோருக்கு வலிமிகுந்த சம்பவங்களும் நடக்கலாம் அவ்வளவே. 🌓 அதுபோல தன் வாழ்வில் ,நண்பர்களின் வாழ்வில் நடந்தவற்றை நம் அருகில் அமர்ந்து  சொல்வதைப் போலவே இருக்கிறது அனைத்து கதைகளும்..😊 #தங்கம்👩‍❤️‍💋‍👩 புத்தகத் தலைப்பாக உள்ள தங்கம் சிறுகதை பற்றி முதலில் கூற வேண்டும் ...திருநங்கை/ நம்பிகளை ஒரு மனிதப் பிறவியாக ,சக உயிராக மதிக்க வலிய...

52.நுகத்தடி

Image
🙈🙉🙊🖤🖤🖤🙈🙊 🧚‍♂️🧚‍♀️🧜‍♀️👮‍♀️👮‍♀️👩‍🎓👩‍💻👩‍💻👩‍🚀👨‍🚀 புத்தகம் ..#நுகத்தடி  ஆசிரியர் ...பாண்டிய கண்ணன் . பதிப்பகம் ..#பாரதி_புத்தகாலயம் . பக்கங்கள்.. 247 வகை ..நாவல் 💜 #ஒரு_நிமிடம்_ஒரு_புத்தகம்_ஒரு_வீடியோ  நிகழ்வில் பங்கேற்றதற்காக பாரதி புத்தகாலயத்தாரால் பரிசளிக்கப்பட்டது. 🖤 புத்தகத்தின் முதல் அத்தியாயத்தைப் படித்து ...2   மாதங்களுக்கு பிறகு,  இப்போது தான் படித்தேன். 15 பக்கங்களை கடந்த பிறகு...எனக்குத் தோன்றியது😒😥  இந்த சினிமாவில் #டிஸ்கிளைமர் என்று போடுவார்கள் இல்லையா? அது போல இருதயம் பலவீனமானவர்கள் இந்த புத்தகத்தை படிக்கும் முன் மனதை #திடப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல் பக்கத்தில் போட்டிருக்கலாம்.  பின்பக்கத்தில் கமலாலயன் சார் கருத்தினை பிறகே படித்தேன் ..எத்தனை கொடுமைகள் எவ்வளவு ரத்தம்????🤢 🖤 செய்தித்தாள்களில் துப்புரவுத் தொழிலாளர்களின் மரணச் செய்திகளை படித்தாலே இதயம் கலங்கும். அதற்குப்பின்னால் அவர்கள் சந்திக்கும் வலி, வேதனை, சொல்லில் அடங்காத் துயரங்கள்...🌓 🖤 கதை .. துப்புரவு தொழிலாளர் குடும்பத்தை ச...

51.நன்மைகளின் கருவூலம்.

Image
🤸‍♂️🤸‍♀️🏋‍♀️🏋‍♂️🤸🤾‍♀️🤾‍♂️🤼‍♂️🤼‍♀️🏋‍♂️⛹🏂⛷🤾‍♂️🤽🤽‍♀️ ❤ புத்தகம்.. நன்மைகளின் கருவூலம்.  ஆசிரியர்கள்.. பிரியசகி, ஜோசப் ஜெயராஜ். பதிப்பகம் ..பாரதி புத்தகாலயம். பக்கங்கள் ..160 வகை ..கட்டுரை தொகுப்பு #சிறப்பு..#கவிதை_உறவு_ 2019 சிறந்த நூல்களுக்கான விழாவில் சிறந்த குழந்தை வளர்ப்பு உளவியல் நூல் என்ற பரிசைப் பெற்றது.💐💐 💜ஆசிரியர்களைப் பற்றி.. #கல்வியில்_நாடகம் பயிலரங்கில் பிரியசகி அவர்களை முதன்முதலாக சந்தித்தேன் . பழகுவதற்கு இனியவர். #கற்றல்_குறைபாடுள்ள_ குழந்தைகளுக்கான அடுத்த பயிலரங்கில் இந்தப் புத்தகத்தைப் பற்றிய அறிமுகம் கிடைத்தது. ஆசிரியர்களும் பெற்றோர்களும் கேட்கும் கேள்விகளுக்கு சளைக்காமல் அக்கறையுடன் பொறுமையாக பதில் அளித்த விதம், உளவியல் சிந்தனைகளை நம் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் உடன் இணைந்து நடத்திய விதம் இந்த புத்தகத்தை உடனே படிக்க தூண்டியது. அதே பயிலரங்கின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மற்றொரு ஆசிரியர் ஜோசப் ஜெயராஜ் அவர்களும் உளவியலாளர், பயிற்சிப்பட்டறை நிபுணர் .எளிமையான சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கங்களை அளிக்கிறார். இருவருக்கும் எ...

50.தமிழர் தலைவர்

Image
50🌞🌞🌞🌞🌞🌞🌞50 💙💙💙💜💜💜💜💜 புத்தகம்..#தமிழர்_தலைவர் .பாகம் 1 ஆசிரியர் ..சாமி. சிதம்பரனார். பதிப்பகம் ...பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம். பக்கங்கள்.. 300 💖 ஏறக்குறைய மூன்று வருடங்களுக்கு முன்பு வாங்கிய புத்தகம். வாழ்க்கை வரலாறு என்றாலே படிப்பதற்கு அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது என்றும், பிறகு படித்துக் கொள்ளலாம் என்றும் ஒதுக்கி வைத்து விடுவேன் . #மாபெரும்_தமிழ்_கனவு  படித்ததன் விளைவாக #பேரறிஞர் இதனைப் படிக்க வைத்துவிட்டார் . இந்த நூலின் இன்னொரு சிறப்பம்சம் நூலாசிரியர் எழுதியவற்றை, பெரியாரே படித்துப்பார்த்து திருத்தம் செய்து இருக்கிறார் .(முதல் பதிப்பு 1939). தமிழர் தலைவர்,  பெற்றோர் பெருமை எனத் தொடங்கிப் பெரியார்  வரை பதினெட்டு கட்டுரைகளில் அவருடைய முடிவுறாத வாழ்க்கை பயணத்தை விவரித்திருக்கிறார் ஆசிரியர். ❤ //சதாசர்வ காலமும் எங்கள் வீட்டில் இருசமய பக்தர்களாலும், பண்டிதர்களாலும்  காலட்சேபம் செய்யப்பட்டு வந்தது.// இது பெரியார் அவர்களே தம் குடும்பத்தைப் பற்றிக்   குறிப்பிட்டவை. #அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே... அதனால்தான்...